Kathir News
Begin typing your search above and press return to search.

ஆளுநர் ஆர்.என்.ரவி பதவியேற்பு விழாவில் பங்கேற்காத திருமாவளவன்! பயமா ?

Breaking News.

ஆளுநர் ஆர்.என்.ரவி பதவியேற்பு விழாவில் பங்கேற்காத திருமாவளவன்! பயமா ?
X

Mohan RajBy : Mohan Raj

  |  19 Sept 2021 4:15 PM IST

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி ஏற்மு விழாவில் தமிழக எம்.பி திருமாவளவன் பங்கேற்கவில்லை! இது தொடர்பாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள திருமாவளவன், "தமிழக ஆளுநராக பொறுப்பேற்றுள்ள ஆர்.என். ரவி மீது பல விமர்சனங்கள் உள்ளன. நாகாலாந்து மாநிலத்தில் அவருக்கு எதிராக மாணவர்கள் உள்பட பல அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. அவர் தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டதில் உள்நோக்கம் உள்ளது. எனவேதான் அவரது நியமனத்தை திரும்பபெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் ஆளுநர் பதவியேற்பு விழாவுக்கு எனக்கு அழைப்பு வந்தது. ஆளுநர் நியமனத்திலேயே உடன்பாடு இல்லாத நிலையில், அந்த விழாவில் பங்கேற்கவில்லை" என தெரிவித்துள்ளார்.

முன்னதாக அவர் ஆளுநர் நியமனத்தை எதிர்த்து விமர்சனம் செய்தார் என்பது குறிப்பிடதக்கது.


Source - Asianet NEWS

Next Story
கதிர் தொகுப்பு
Trending News