Begin typing your search above and press return to search.
காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்க விவகாரத்தை கையில் எடுத்த திருமாவளவன்
காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்க விவகாரத்தை கையில் எடுத்த திருமாவளவன்

By : Mohan Raj
மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில் துறைமுகம் செயல்பட்டு வருகிறது. இந்த துறைமுகம் 6 ஆயிரத்து 100 ஏக்கரில் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் காட்டுப்பள்ளி அடுத்த செங்கழுநீர்மேடு, பழவேற்காட்டின் லைட்அவுஸ்குப்பம், வைரவன்குப்பம், கோரைக்குப்பம் ஆகிய கிராமங்களுக்கு நேற்று சென்று பார்வையிட்டு பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டறிந்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் பேசும்போது அவர் கூறியதாவது, "பொதுமக்கள் மற்றும் மீனவர்களை பாதிக்கும் துறைமுகத்தின் விரிவாக்க பணிகளை ரத்து செய்ய கோரி நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் குரல் எழுப்புவேன்" என தெரிவித்தார். அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி வன்னியரசு உள்ளிட்ட சிலர் உடன் இருந்தனர்.
Next Story
