Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழ் கடவுள் முருகனை கொச்சைப்படுத்திய திருமாவளவன! தன் கட்சிக் கூட்டத்தில் பெற்றுக் கொண்ட 'வேல்'!

தமிழ் கடவுள் முருகனை கொச்சைப்படுத்திய திருமாவளவன! தன் கட்சிக் கூட்டத்தில் பெற்றுக் கொண்ட 'வேல்'!

தமிழ் கடவுள் முருகனை கொச்சைப்படுத்திய திருமாவளவன! தன் கட்சிக் கூட்டத்தில் பெற்றுக் கொண்ட வேல்!

Saffron MomBy : Saffron Mom

  |  7 Feb 2021 7:46 AM GMT

விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனுக்கு அக்கட்சியின் சிறப்பு செயற்குழு கூட்டத்தில் ஒரு 'வேல்' அக்கட்சி நிர்வாகிகளால் வழங்கப்பட்டது. நியூஸ்7 செய்திகள் வெளியிட்ட இத்தகவல் சமூகவலை தளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் இதற்கு கிண்டல் கலந்த தொனியில் பதில் அளித்து வருகின்றனர்.

தேர்த்கலுக்காக தி.மு.கவும், விசிகவும் வேல் ஏந்துகிறதா என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், தேர்தலுக்காக ஏந்துவது அல்ல தமிழர்களுக்கு இது நீண்ட நாள் பாரம்பரியமான ஒரு பண்பாடு. எங்கள் கட்சியிலும் முருக பக்தர்கள் இருக்கிறார்கள் என்பதை வெளிக்காட்ட என்னிடத்தில் வேலை வழங்கி இருக்கிறார்கள் என்றார்.

சமீபத்தில் தமிழ்க்கடவுள் முருகனை திராவிடர் கழகக் கூட்டத்தில் திருமாவளவன் கொச்சைப்படுத்தியது பலருக்கும் நினைவிருக்கலாம். தமிழ் கடவுளாம் முருகனைக் கொண்டாடும் தைப்பூசத் திருவிழாவிற்கு, தமிழக அரசு பலரின் வேண்டுகோளை ஏற்று இந்த ஆண்டு முதல் அரசு விடுமுறை அளித்தது. இது பொறுக்காமல் மறுபடியும் ஹிந்து மதத்தை இழிவுபடுத்தும் விதமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவனின் வெறுப்புப் பேச்சுக்களை தொடர்ந்தார்.

திராவிடர் கழகம் நடத்திய ஒரு விருது வழங்கும் விழாவில் பேசிய திருமாவளவன், முருகன் தமிழ்க் கடவுள் என்றால் அவருடைய அண்ணனாகிய விநாயகர் மட்டும் எப்படி ஹிந்தி கடவுள் ஆவார்? இருவரும் ஒரு அப்பா, அம்மாவிற்கு பிறந்தவர்கள் தானே என கொச்சையாக கேள்விகளை எழுப்பினார்.

தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை அளித்தால் மட்டும் நாம் தமிழர்களாக தலைநிமிர்ந்து விடுவோமா? என்று கேள்வி எழுப்பினார். முருகனை நம் கடவுள் என்று ஏற்றுக் கொண்டால், சனாதனம் என்ற வழுக்கு பாறையில் வைத்து விழுந்துவிடுவோம். இதன் காரணத்தினாலேயே தான் இதிலிருந்து திராவிடர் கழகம் முழுமையாக ஒதுங்கி நிற்பதாகவும் தெரிவித்தார்.

இப்படியெல்லாம் பேசியவருக்கு எதற்காக கடவுள் முருகனின் ஆயுதமான 'வேல்' வழங்கப்பட்டது? கறுப்பர் கூட்டம் யூ டீயூப் சேனல் கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக சித்தரித்தது தமிழ் நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து இக்கூட்டத்துடன் தி.மு.கவிற்கு உள்ள உறவை வெளிப்படுத்த பா.ஜ.க மாநிலத் தலைவர் L .முருகன் 'வேல் யாத்திரை'யை வெற்றிகரமாக பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் நடத்தி முடித்தார்.


இதைத் தொடர்ந்து தான் தி.மு.க தலைவர் ஸ்டாலினும், அவரது மகன் உதயநிதியும் வேல் பெறுவது, சூலத்தை வணங்குவது என பல்வேறு நிகழ்வுகளை நிகழ்த்தி வருகின்றனர். தற்போது திருமாவளவனும் இந்தப் பட்டியலில் சேர்ந்துள்ளார். இது தேர்தலுக்கான நாடகம் என்று எடுத்துக்கொண்டாலும், இத்தனை வருடம் இத்தகைய நாடகங்கள் அவ்வளவாக அரங்கேறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தை நாள் பேசிய இந்து எதிர்ப்பு கோஷங்களை, தேர்தல் வரைக்குமாவது நேரடியாக கைவிட வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாக்கியது 'வேல் யாத்திரை'யா? என்பது இனி அரசியல் வட்டாரங்களில் விவாதிக்கப்படும்.

Cover Image Credit: News18Tamil

Next Story
கதிர் தொகுப்பு
Trending News