Kathir News
Begin typing your search above and press return to search.

நீட் வரும் முன் மருத்துவ சீட் வழங்க கருப்பு பணம் வாங்கினார்கள் - திருமாவளவனின் ஒப்புதல் வாக்குமூலம்

நீட் வருவதற்கு மருத்துவ படிப்பிற்கு ஒரு கோடி ரூபாய் செலவானது என ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கும் விதமாக திருமாவளவன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீட் வரும் முன் மருத்துவ சீட் வழங்க கருப்பு பணம் வாங்கினார்கள் - திருமாவளவனின் ஒப்புதல் வாக்குமூலம்
X

Mohan RajBy : Mohan Raj

  |  12 July 2022 6:46 PM IST

நீட் வருவதற்கு மருத்துவ படிப்பிற்கு ஒரு கோடி ரூபாய் செலவானது என ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கும் விதமாக திருமாவளவன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அம்பத்தூர் தொழில்பேட்டையில் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் கல்வி அறக்கட்டளை அலுவலக வளாகத்தில் நீட் தேர்வு இலவச பயிற்சி மையத்தை திருமாவளவன் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

அப்போது பேசிய அவர் கூறியதாவது, 'இந்தியாவின் நீட் தேர்வு வேண்டாம் என கூறும் ஒரு ஒரே மாநிலம் தமிழக அரசுதான் மற்ற மாநிலங்களில் இது குறித்து விழிப்புணர்வு இல்லை.

தனியார் கல்லூரிகள் அதிக கட்டணம் சோளிக்கிறார்கள் என்பதால் நீட் தேர்வு கொண்டு வருகிறோம் என கூறினார்கள் ஆனால் நீட் தேர்வு வந்த பிறகு டொனேஷன் வாங்கிக் கொண்டிருந்தது, தற்பொழுது பீஸ் என பெறுகிறார்கள் கருப்பு பணம் பெற்றவர்கள் தற்போது வெள்ளை பணமாக பெறுகிறார்கள் இது மாறவில்லை, நீட் வருவதற்கு முன்பு மருத்துவ படிப்பிற்கு ஒரு கோடி செலவானது நீட் வந்த பிறகும் மருத்துவ படிப்பிற்கு ஒரு கோடி செலவாகிறது' என கூறினார்.

நீட் தேர்வு கொண்டு வந்த காரணத்தினால் மருத்துவ படிப்பிற்கு லஞ்சம் கொடுக்கும் அவல நிலை தொடராது என பா.ஜ.க திறப்பு கூறியதை மறுத்து பேசி வந்தனர் தி.மு.க மற்றும் விடுதலை சிறுத்தை உள்ளிட்ட கட்சிகள். தற்பொழுது திருமாவளவனே பேசும் பொழுது நீட் படிப்பிற்கு கருப்பு பணமாக ஒரு கோடி ரூபாய் வரை தரப்பட்டது என கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Source - News 18 Tamil

Next Story
கதிர் தொகுப்பு
Trending News