எந்நேரமும் இடிந்து விழும் நிலையில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள நூலகம் - கவனிப்பாரா திருவாரூரை பூர்வீகமாக கொண்ட முதல்வர்?
By : Mohan Raj
திருவாரூர் மாவட்டம், கொராடாச்சேரியில் செயல்பட்டுவரும் அரசு நூலகம் ஒன்றின் கட்டடம் எந்நேரம் வேண்டுமானானும் இடிந்து விழும் என்ன நிலையில் உள்ளதால் அந்த பகுதி பயனாளர்கள் பயத்துடனே வாழ்கின்றனர்.
தி்ருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி பேரூராட்சி வளாகத்துக்கு உட்பட்ட பகுதியில் தமிழக அரசின் கிளை நூலகம் செயல்பட்டுவருகிறது. கொராடாச்சேரி, அதன் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்களும், பள்ளி, கல்லூரி மாணவர்களும் இந்த நூலகத்தைப் பயன்படுத்திவருகிறார்கள். இந்த நிலையில்தான், கடந்த சில ஆண்டுகளாக இந்தக் கட்டடம் படிப்படியாகச் சேதமடையத் தொடங்கியிருக்கிறது. குறிப்பாக, இந்தக் கட்டடத்தின் மேற்கூரை சிமென்டு பூச்சுகள் பெயர்ந்துகொண்டேவருகின்றன. இதனால் பெய்து வரும் கனமழையால் அந்த கட்டிடம் எந்நேரம் வேண்டுமானாலும் இடிந்து விழ வாய்ப்புள்ளது.
இதோ பற்றி அந்த பகுதி மக்கள் கூறும்பொழுது, "இங்கே பல துறைகளைச் சேர்ந்த ஏராளமான அரிய புத்தகங்கள் எல்லாம் இருக்கு. எந்த நேரத்துல வேணும்னாலும் இந்தக் கட்டடம் இடிஞ்சி விழக்கூடிய நிலையில இருக்கு. தொடர்ச்சியா மழை பெஞ்சதுனால, மேற்கூரையில் இருக்குற விரிசல்கள் வழியா மழைநீர் உள்ள வந்து புத்தகங்கள் நனைஞ்சு, அழிஞ்சுக்கிட்டு இருக்கு. புத்தகங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் ஒரு பக்கம்னா, நூலகத்துக்கு புத்தகங்கள் படிக்க வரக்கூடிய பொதுமக்கள், மாணவர்களோட உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை இருக்கு. மழைத் தண்ணீர், நூலகத்துக்குள்ளார வர்றதுனால, புத்தகங்களைப் படிக்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டுக்கிட்டு இருக்கோம்" என கூறியுள்ளனர்.
இது குறித்து நூலக அலுவலர் ஆண்டாள் கூறும்பொழுது, "இதெல்லாம் 20 வருஷங்களுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டடங்கள். புதிய கட்டடம் கட்ட போதுமான நிதியில்லை. தமிழக அரசின் உயர் அலுவலர்களின் கவனத்துக்கு இதைக் கொண்டு சென்றிருக்கிறோம்" என கூறியுள்ளார்.
மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி பெயரில் மதுரையில் 114 கோடியில் நூலகம் அமைக்க நிதி ஒதுக்கியிருக்கும் முதல்வர் ஸ்டாலின் தன் சொந்த மாவட்டதிலுள்ள அவல நிலையுலுள்ள நூலகத்தை சீர் செய்யவாரா என மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.