Kathir News
Begin typing your search above and press return to search.

"இது பழைய இந்தியா அல்ல. புது இந்தியா.!" - பாராளுமன்றத்தில் தயாநிதிமாறனை விளாசித் தள்ளிய பா.ஜ.க MP தேஜஸ்வி சூர்யா.!

 இதுவே பழைய இந்தியாவாக இருந்திருந்தால் தயாநிதிமாறனின் தாத்தா, பாட்டி, தி.மு.க தலைவர் ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் முதலில் தடுப்பூசிகளை போட்டுக் கொண்டிருப்பார்கள்.

இது பழைய இந்தியா அல்ல. புது இந்தியா.! - பாராளுமன்றத்தில் தயாநிதிமாறனை விளாசித் தள்ளிய பா.ஜ.க MP தேஜஸ்வி சூர்யா.!

Saffron MomBy : Saffron Mom

  |  11 Feb 2021 7:44 AM GMT

பாராளுமன்றத்தில் நேற்று நடந்த விவாதத்தின் பொழுது தமிழகத்தைச் சேர்ந்த தி.மு.க MP தயாநிதி மாறன் பேசினார். அப்போது, இந்தியாவின் கொரானா வைரஸ் தடுப்பூசிகளை ஏன் பிரதமர், குடியரசுத் தலைவர், உள்துறை அமைச்சர், பாதுகாப்பு அமைச்ச,ர் ஆகியோர் வெளிப்படையாக முதலில் போட்டுக்கொண்டு மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்க கூடாது என்று பேசினார்.

அவர் கூறிய விஷயத்தில் கவனிக்கப்பட வேண்டிய இரண்டு விஷயங்கள் இரண்டு. உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவுடன் தொடர்பு கொண்டு தடுப்பூசிகளை கோரி வரும் வேளையில், இந்திய தடுப்பூசிகளை நமது முக்கியமான நான்கு தலைவர்கள் போட்டுக் கொண்டால் மட்டுமே மக்களுக்கு நம்பிக்கை வரும் என்ற ரீதியில் பேசுகிறார்.

மற்றொன்று தடுப்பூசி முன்களப்பணியாளர்களுக்கும், மருத்துவர்களுக்கும், துப்புரவு பணியாளர்களுக்கும், முதியவர்களுக்கும், பலவீனமானவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு போட்டுக்கொள்வார்கள் என்று முன்பே அறிவிக்கப்பட்டது. இதைத்தாண்டி நாட்டின் தலைவர்கள் தங்கள் வரிசை மீறி தடுப்பூசியை பெற்றுக்கொள்வது முறையாக இருக்காது.

இந்திய தடுப்பூசிகளின் தரத்தை நம்பகத்தன்மையை குறைத்து மதிப்பிடும் வகையில் இதை நையாண்டியாக பேசியதற்கு பதில் தெரிவித்த பா.ஜ.கவை சேர்ந்த இளம் தலைவர் தேஜஸ்வி சூர்யா, "தி.மு.க எம்பி ஏன் அரசியல்வாதிகள் தடுப்பூசியை முதலில் போட்டுக் கொள்ளவில்லை என்று நையாண்டியாக கேள்வி எழுப்பினார். நான் அதற்கு கேட்கிறேன், இது பழைய இந்தியாவாக இருந்திருந்தால் அவ்வாறு தான் நடந்திருக்கும். இது புது இந்தியா. இங்கே முன்கள பணியாளர்களுக்கும், மருத்துவர்களுக்கும், துப்புரவு பணியாளர்களுக்கும் தான் முன்னுரிமை கொடுக்கப்படும் என்று விதிமுறைகள் இருக்கும் பொழுது அப்படித்தான் பின்பற்றப்படும்.

இதுவே பழைய இந்தியாவாக இருந்திருந்தால் தயாநிதிமாறனின் தாத்தா, பாட்டி, தி.மு.க தலைவர் ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் முதலில் தடுப்பூசிகளை போட்டுக் கொண்டிருப்பார்கள். ஆனால் இது புதிய இந்தியா. எனவே இங்கே தங்களுடைய முறையை மீறி அரசியல்வாதிகளுக்கு தனிப்பட்ட முறையில்முன்னுரிமையும் காட்டப்படாது" என்று தெளிவாக தெரிவித்தார். இது பலத்த ஆரவாரத்திற்கிடையே அங்கே வரவேற்கப்பட்டது. இந்த கிளிப் சமூக வலைதளங்களில் வைரலாகி பலரும் பாராட்டி வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News