தாலிபான் எண்ணங்களுடன் மெகபூபா முப்தி உள்ளார்: காஷ்மீர் பா.ஜ.க. தலைவர் கடும் விமர்சனம்!
டி20 உலகக் கோப்பை கடந்த 24ம் தேதி நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது.
By : Thangavelu
டி20 உலகக் கோப்பை கடந்த 24ம் தேதி நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 17.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 152 ரன்கள் எடுத்தது. இதனிடையே இந்தியாவை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற்றது.
டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தியதை பாகிஸ்தான் ரசிகர்கள் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். சமூக வலைதளங்களில் இந்தியா, பாகிஸ்தான் ரசிகர்கள் கருத்து மோதலில் ஈடுபட்டு வருவதை காணமுடிகிறது. இதே போன்று காஷ்மீரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் கொண்டாடினர். இதனை சமூக வலைதளங்களில் வீடியோவாக பதிவிட்டனர். இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தியாவில் பிறந்தவர்கள் அடுத்த நாட்டின் வெற்றியை கொண்டாடுவதை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்நிலையில், காஷ்மீர் துண்டாக்கப்பட்டு, சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்டபோது எத்தனை பேர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள் என்பதை யாரும் மறக்கவில்லை என்று முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி கருத்தி கூறியிருந்தார்.
இந்நிலையில், மெகபூபா முப்தியின் கருத்துக்கு ஜம்முகாஷ்மீர் பாஜக தலைவர் ரவீந்தர் ரைனா கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறுகையில், மெகபூபா முப்தி தலீபானிய எண்ணங்களுடன் உள்ளார். இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் நாட்டின் வெற்றியை கொண்டாடுபவர்கள் நாட்டுக்கு எதிராக சதி செய்ததாக கூறி சிறையல் தள்ளப்படுவார்கள் என்று கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Source, Image Courtesy: Daily Thanthi