Kathir News
Begin typing your search above and press return to search.

உள்ளாட்சி தேர்தலில் பணம் செலுத்தியவர்கள் மீண்டும் திரும்பப் பெறலாம்.. அதிமுக.!

உள்ளாட்சி தேர்தலில் பணம் செலுத்தியவர்கள் மீண்டும் திரும்பப் பெறலாம்.. அதிமுக.!

உள்ளாட்சி தேர்தலில் பணம் செலுத்தியவர்கள் மீண்டும் திரும்பப் பெறலாம்.. அதிமுக.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  22 Nov 2020 3:05 PM GMT

தமிழகத்தில் கடந்த வருடம் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அப்போது மாநகராட்சி, நகராட்சி தேர்தலையும் நடத்த தமிழக தேர்தல் ஆணையம் திட்டமிட்டது. ஆனால் ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெற்றது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தேர்தல் நடைபெறவில்லை. இதற்காக தலைமையிடம் மேயர், மற்றும் நகராட்சித்தலைவர் பதவிக்கு கட்சியினர் தலைமையிடம் விருப்ப மனுவோடு பணமும் செலுத்தியிருந்தனர்.


இந்நிலையில், அதிமுகவில் மாநகராட்சி, நகராட்சி தலைவர் மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு வாய்ப்பு வேண்டி விருப்பமனு அளித்தவர்கள், தங்கள் விண்ணப்ப கட்டணத்தை திருப்பிப்பெற இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற இருந்த நிலையில் அதிமுகவில் மாநகராட்சி, நகராட்சித்தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு வாய்ப்பு வேண்டி 15.11.2019 முதல் விருப்பமனு அளித்திருந்தனர். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அமைப்புகளுக்கு தேர்தல்கள் நடைபெறாத நிலையில், இதற்கான விருப்பமனு விண்ணப்ப கட்டணத் தொகையை அதிமுகவினர் தலைமை கழகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்று 21.11.2019 அன்று வெளியிடப்பட்டது.


இந்நிலையில், மேற்கண்ட பதவிகளுக்கு விருப்பக் கட்டணம் செலுத்தி, அந்த தொகையை திரும்பப்பெறாதவர்கள் வருகின்ற 23.11.2020 முதல் 15.12.2020 வரை, தாங்கள் கட்டிய விருப்பமனு கட்டணத்திற்கான தொகையை அசல் ரசீதுடன் தலைமை கழகத்திற்கு நேரில் வந்து பெற்றுக்கொள்ளலாம் என்றும், இந்த காலக்கெடு மீண்டும் நீட்டிக்கப்பட்மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News