தேர்தலுக்கு முன் துரைமுருகன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சிறைக்கு செல்வது உறுதி.. முதல்வர் தகவல்.!
தேர்தலுக்கு முன் துரைமுருகன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சிறைக்கு செல்வது உறுதி.. முதல்வர் தகவல்.!

திமுக முன்னாள் அமைச்சர்களாக ஐ.பெரியசாமி, துரைமுருகன், பொன்முடி, பெரியகருப்பன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் மீது ஊழல் வழக்குகள் நீதிமன்றத்தில் நடந்து வருவதகாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
ஈரோட்டில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியபோது, திமுக தலைவர் ஸ்டாலின் நடத்தும் கிராம சபைக் கூட்டத்தால் மக்களுக்கு எந்த பயனும் கிடையாது. மேலும், ஸ்டாலின் வாங்கும் மனுக்கள் அனைத்தும் எங்கு செல்கிறது கூட யாருக்கும் தெரியாது.
தமிழக ஆளுநரை சந்தித்த ஸ்டாலின் அதிமுக அரசு மீது பொய் குற்றச்சாட்டுகள் அடங்கிய மனுவை அளித்துள்ளார். தேர்தலுக்கு பிறகு அதிமுக அமைச்சர்கள் களி சாப்பிடப் போகிறார்கள் என்றால், ஸ்டாலின் மட்டும் என்ன சிறைச்சாலையில் பிரியாணியா சாப்பிட போகிறார்.
மேலும், திமுக முன்னாள் அமைச்சர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் விசாரணைகள் தற்போது நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில ஐ பெரியசாமி மீது 9 வழக்குள், துரைமுருகன் மீது 2 வழக்குகள், தங்கம் தென்னரசு மீது 1 வழக்கு, அனிதா ராதாகிருஷ்ணன் மீது ஒரு வழக்கு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஒரு வழக்கு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டு உள்ளது.
இதுவரை எவ்வளவு வழக்குகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. ஆனால் அத்தனைக்கும் வாய்தா வாங்கிக்கொண்டு தப்பித்து வருகிறார்கள். ஆனால் இன்றைய தினத்தில் உயர்நீதிமன்றம் இந்த வழக்குகளை உடனடியாக விசாரணை செய்ய வேண்டும் என்று உத்தரவு போட்டுள்ளது. நீங்கள் அத்தனை பேரும் தேர்தலுக்கு முன்னரே சிறைக்கு செல்வது உறுதி. இவ்வாறு அவர் பேசினார்.