Kathir News
Begin typing your search above and press return to search.

வெளிநாட்டினருக்கு துரைமுருகன் ஆதரவு! தி.மு.கவினருக்கு நாட்டுபற்று என ஒன்று இருக்கிறதா?

வெளிநாட்டினருக்கு துரைமுருகன் ஆதரவு! தி.மு.கவினருக்கு நாட்டுபற்று என ஒன்று இருக்கிறதா?

வெளிநாட்டினருக்கு துரைமுருகன் ஆதரவு! தி.மு.கவினருக்கு நாட்டுபற்று என ஒன்று இருக்கிறதா?

Mohan RajBy : Mohan Raj

  |  6 Feb 2021 8:22 AM GMT

தி.மு.கவினருக்கும் நாட்டுப்பற்றிற்கும் எப்பொழுதுமே சம்மந்தம் கிடையாது என்பது அடிக்கடி அவர்களது நடவடிக்கைகளில் இருந்து தெரிகிறது. அந்த வகையில் தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் "விவசாயிகள் பிரச்சனையில் ஏன் வெளிநாட்டினர் கருத்து தெரிவிக்க கூடாது" என கொஞ்சமும் நாட்டுப்பற்று இன்றி கருத்து தெரிவித்துள்ளார்.

வரும் சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் வரும் தமிழக சட்டமன்ற தேர்தல் பணிக்காக வேலூர் மாவட்ட தி.மு.க சட்டத்துறை சார்பில் மத்திய மாவட்ட அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் "WAR ROOM"ஐ தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் மற்றும் அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் திறந்துவைத்தனர்.

அதனை திறந்து வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறியதாவது, "ஆக ஒரேநாடு, ஒரேமொழி, ஒரே இந்தியா என்ற ஆசோகர் கால அரசர் ஆட்சி போன்ற காட்சியை உருவாக்க பார்க்கிறார்கள். பட்ஜெட்டில் நிதியை ஒதுக்குகிறார்களே தவிர கொடுத்ததாக தெரியவில்லை" என்றார்.

மேலும், இந்திய விவசாயிகள் போராட்டம் தொடர்பாக வெளிநாட்டு பிரபலங்கள் கருத்து தெரிவிப்பது குறித்து செய்தியாளர்கள் கருத்து கேட்டதற்கு, "ஏன் கருத்து சொல்லக்கூடாது. இன்றைக்கு உலகம் சுருங்கி போய்யுள்ளது. உலக நாட்டில் எந்த பிரச்சனை நடந்தாலும் கருத்து தெரிவிக்கலாம். அந்த வகையில் விவசாயிகள் பிரச்சினையில் ஏன் வெளிநாட்டினர் கருத்து தெரிவிக்க கூடாது?" என்று நாட்டுபற்று என ஒன்று தி.மு.கவினருக்கு இருக்கிறதா என சந்தேகிக்கும் வகையில் பதிலளித்துள்ளார்.

இந்திய நாட்டின் குடியரசு தினத்தன்று திட்டமிட்டு போராட்டத்தை கலவரமாக்கி இந்திய தலைநகரத்தை உலக அரங்கில் அவமதித்த விவசாயிகள் போராட்டத்தை உலக நாடுகளின் பிரபலங்கள் இந்தியாவை அசிங்கப்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் விமர்சிக்கும் போது அதனை ஆதரித்து தி.மு.க கருத்துக்கள் வெளியிடுவது தி.மு.க'வினருக்கும் நாட்டுப்பற்றிற்கும் சம்மந்தம் இல்லை எனவே தோன்றுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News