பதவியே இன்னும் ஏற்கல.. திருச்சியில் அடிதடியில் இறங்கிய தி.மு.க. கவுன்சிலர்கள்!
By : Thangavelu
திருச்சியில் போலீயோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்ற இடத்தில் திமுக கவுன்சிலர்கள் ஒருவருக்கு ஒருவர் அடிதடியில் ஈடுபட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. அதே போன்று திருச்சி பெரியமிளகுப்பாறை பகுதியில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியர் சிவராசு கலந்து கொண்டு சொட்டு மருந்து முகாமை துவக்கி வைத்தார்.
அப்போது 54வது வார்டு திமுக கவுன்சிலர் புஷ்பராஜ் சொட்டு மருந்து வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆட்சியர் முன்பு போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். அப்போது 55வது வார்டு திமுக கவுன்சிலர் ராமதாசும் சொட்டு மருந்து விழாவில் கலந்து கொண்டார். அப்போதே இருவருக்கும் சண்டை ஆரம்பமானது. ஆட்சியர் அங்கிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இருவரும் அடிதடியில் இறங்கினர். எனது வார்டில் நடைபெறும் நிகழ்ச்சியில் எப்படி பங்கேற்கலாம் என்று புஷ்பராஜ் கேள்வி எழுப்பினார். இதனால் ராமதாஸ் எதுவும் பேசாமல் புறப்பட இருந்த நிலையில், இருவரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பாகவே சண்டையிட்டுக்கொண்டனர். அப்போது அங்கிருந்த போலீசார் சமாதானம் செய்தபோது காதில் வாங்காமல் ஒருவருக்கு ஒருவர் தாக்கிக்கொண்டனர்.
அங்கு வாக்களித்த மக்கள் முன்னிலையிலேயே திமுக கவுன்சிலராக பதவியேற்பதற்கு முன்னரே ஒருவருக்கு ஒருவர் அடித்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் 5 வருடம் எப்படி அந்த வார்டு மக்கள் தங்களின் காலத்தை கழிப்பார்கள் என்ற அச்சம் தற்போதில் இருந்தே பேசத்தொடங்கி விட்டனர்.
Source, Image Courtesy: News 18 Tamil