ஏங்க! நியாயத்தை தானே கேட்டாங்க? வீடு தேடி சென்ற விவசாயிகளை அவமானப்படுத்தி அனுப்பிய அமைச்சர் செந்தில் பாலாஜி!
வீடு தேடி சென்ற விவசாயிகளை அவமானப்படுத்தி அனுப்பிய அமைச்சர் செந்தில் பாலாஜி

விளைநிலங்களில் அமைக்கப்படும் உயர்மின் கோபுர விவகாரத்தில், கொடுத்த வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றத் தவறிவிட்டதாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் திருப்பூர் ஈசன் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
உயர்மின் கோபுரத்தை விளைநிலங்களில் அமைக்கப்படுவதற்கு பதிலாக சாலை வழியாக பதிப்போம் என திமுக வாக்குறுதி அளித்திருந்தது. அது குறித்து விளக்கம் கேட்க அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் சென்ற போது, முதல்வர் வாக்குறுதி கொடுத்தால் நீங்கள் அவரிடமே போய் கேட்டுக்கொள்ளுங்கள் என்றும் அதைப்பற்றி தனக்குத் தெரியாது என அவமானப்படுத்தி அனுப்பியுள்ளார்.
எதிர்க்கட்சியாக இருந்தபோது விளைநிலங்கள் வழியாக உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக, தற்போது அவர்களது ஆட்சி அமைந்த பிறகு, அதே பணிகளை மீண்டும் தொடர்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து பேசிய தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் திருப்பூர் ஈசன், ''கடந்த அதிமுக ஆட்சியில் என்ன செய்தார்களோ, அதையே தான் திமுக ஆட்சியிலும் செய்கிறார்கள். விவசாய நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரம் அமைப்பதற்கு பதில் கேபிள் வழியாக மின் தடத்தை கொண்டு செல்வோம் என்றார்கள், நாங்களும் இதை முழுமையாக நம்பினோம். ஆனால் இப்போது நடப்பது அதற்கு நேர்மாறாக உள்ளது.'' எனக் கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் விவசாயிகள் அடங்கிய குழு அமைத்து ஆலோசனைகள் கேட்கப்படும் என திமுக வாக்குறுதி கொடுத்த நிலையில், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வீடு தேடி சென்ற விவசாயிகளையும், முதல்வர் உறுதி கொடுத்தது பற்றி எனக்குத் தெரியாது, அவர் உங்களுக்கு வாக்குறுதி கொடுத்திருந்தால் அவரை போய் பாருங்க. முதலில் கிளம்புங்க எனக் கூறி விரட்டியடித்துள்ளார்.இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினை சந்திக்க உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.