Kathir News
Begin typing your search above and press return to search.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊடக மையம் திறப்பு.!

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெறுவதையொட்டி தேர்தல் ஆணையம் தீவிரமாக பணியினை செய்து வருகிறது. அதன்படி இன்று வேட்புமனுத்தாக்கல் பணி தொடங்கியுள்ளது.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊடக மையம் திறப்பு.!
X

ThangaveluBy : Thangavelu

  |  12 March 2021 12:37 PM IST

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெறுவதையொட்டி தேர்தல் ஆணையம் தீவிரமாக பணியினை செய்து வருகிறது. அதன்படி இன்று வேட்புமனுத்தாக்கல் பணி தொடங்கியுள்ளது.

இந்நிலையில், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டாம் தளத்தில் உள்ள செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலகத்தில் இயங்கி வரும் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு மைய செயல்பாடுகளை மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சித்தலைவருமான வே.சாந்தா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.




இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: சட்டமன்ற பொதுத்தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறல்களை கண்காணிக்க ஊடக சான்று மற்றும் கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இந்த மையத்தில் செய்தித்தாள்களில் வெளிவரும் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் தொடர்பான விளம்பரங்கள், பிரச்சார செய்திகள், வேட்பாளர்கள் குறித்து வெளியிடப்படும் கருத்துகள் ஆகியவற்றை கண்காணித்து பதிவு செய்யப்படும். இதற்காக ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு மையம் செய்தி மக்கள் தொடர்பு அலுவலக அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.




இந்த மையத்தில் தொலைக்காட்சி செய்திகளை பார்வையிட 8 தொலைக்காட்சிகளும், தேவைப்பட்ட செய்திகளை பதிவு செய்ய பிரத்யேக உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், உள்ளூர் தொலைக்காட்சிகளின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News