Kathir News
Begin typing your search above and press return to search.

இதுவரைக்கும் நடந்தது சம்பவம் இல்லை.. இனிமேதான் சம்பவமே..! இன்று துவங்கும் யாத்திரையில் என்னதான் ஸ்பெஷல்?

இதுவரைக்கும் நடந்தது சம்பவம் இல்லை.. இனிமேதான் சம்பவமே..! இன்று துவங்கும் யாத்திரையில் என்னதான் ஸ்பெஷல்?
X

Mohan RajBy : Mohan Raj

  |  16 Oct 2023 9:35 AM GMT

அதிரப்போகும் களம்...! இன்று முதல் ஆரம்பமாகும் யாத்திரை...! கசிந்த சிறப்பு தகவல்கள்...!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முதற்கட்டமாக யாத்திரையை முடித்துவிட்டு மீண்டும் அடுத்த கட்ட யாத்திரையை விரைவில் துவங்குவேன் என்று அறிவித்திருந்தார், பிரதமர் மோடியின் ஒன்பது ஆண்டு கால சாதனைகளை பரப்புவதற்காக அண்ணாமலை யாத்திரை கடந்த செப்டம்பர் மாதம் ராமேஸ்வரத்தில் ஆரமித்தார், உள்துறை அமைச்சர் அமித்ஷா துவங்கிவைத்த இந்த யாத்திரை கிட்டத்தட்ட தென் மாவட்டங்கள் அனைத்தும் முடிந்துவிட்டது..

இந்த நிலையில் தற்பொழுது மேற்கு மண்டலமான கோவையில் கடந்த மாதம் இறுதியில் யாத்திரை நிறைவடைந்தது, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு யாத்திரைக்கு சிறிது காலம் ஓய்வு கொடுத்திருந்த நிலையில் அண்ணாமலையின் டெல்லி பயணம், அதன் பின் அவருக்கு ஏற்பட்ட சில உடல் நல குறைபாடுகள் போன்றவை காரணமாக யாத்திரை தள்ளிப்போனது.

இந்த நிலையில் இன்று மீண்டும் யாத்திரை அவினாசியில் துவங்கி இருக்கிறது, அதனை தொடர்ந்து இந்த யாத்திரை பல்லடத்தில் 19ஆம் தேதி, திருப்பூர் வடக்கு, தெற்கு தொகுதிகளில் அக்டோபர் 20ஆம் தேதி நடக்கவிருக்கிறது. திருப்பூரில் மூன்றாம் கட்ட யாத்திரை தொடக்க விழாவில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பங்கேற்க உள்ளார்.

அதிமுக-பாஜகவின் கூட்டணி முடிவு, மேலும் தற்பொழுது திமுக தரப்பில் முழு வீச்சுடன் கூட்டணி பேச்சு வார்த்தை தேர்தல் வேலைகள் என இறங்கி இருக்கும் சமயத்தில் இதற்கு முன்பு நடைபெற்ற யாத்திரைகளில் அண்ணாமலை பங்கேற்று செயல்பட்டதை விட இந்த யாத்திரையில் எப்படி பங்கேற்று செயல்பட போகிறார் என ஆர்வம் எழுந்துள்ளது பொதுமக்களுக்கு.

அது மட்டுமல்லாமல் கொங்கு மண்டலத்தில் இருந்து யாத்திரை மெல்ல மெல்ல திருச்சி மத்திய மண்டலம் மற்றும் டெல்டா மண்டலம் ஆகிய பகுதிகளில் யாத்திரை நடைபெற இருக்கிறது, பின்பு கடலூர், விழுப்புரம் வழியாக திருவண்ணாமலை, வேலூர் சென்று இறுதியாக சென்னை சென்று முடிவடையும் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இன்று துவங்கிய இருக்கும் யாத்திரையில் அண்ணாமலை எது போன்ற அரசியலை முன்னெடுக்கப் போகிறார்? இன்னும் வரும் நாட்களில் களத்தில் எது போன்று அண்ணாமலை செயல்பட போகிறார்? என கமலாலய வட்டாரத்தில் விசாரித்த பொழுது சுவாரசியமான சில தகவல்கள் கிடைத்தன.

அதாவது இனிவரும் யாத்திரை முன்பு இருந்ததைவிட வேகமாக இருக்கும், முன்பு இருந்த யாத்திரை பிரதமர் மோடியின் நலத்திட்டங்களை மக்கள் மத்தியில் 'மோடியின் முகவரி' என்ற பெயரில் கொண்டு சேர்ப்பதற்காக தான் இருந்தது. ஆனால் இனிவரும் யாத்திரையில் திமுக அரசின் செயல்பாடுகள், திமுக அரசு தேர்தலை முன்வைத்து செய்யும் அரசியல் ஆகியவற்றை மக்கள் மத்தியில் தோலுரிப்பது போன்று இருக்கும் என தகவல்களை கசிய விடுகின்றனர் கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன, இதனால் அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது.

மேலும் இனி யாத்திரை நடக்கும்போது வரும் 2024 தேர்தலை மையப்படுத்தி களத்தில் பல அதிரடிகளை அண்ணாமலை நிகழ்த்தவிருக்கிறார் என தகவல்களை கூறுகின்றனர். அது மட்டுமில்லாமல் DMK பைல்ஸ் அடுத்தடுத்த பாகங்களை வரும் நாட்களில் அண்ணாமலை யாத்திரை நடக்கும் சமயத்தில் வெளியிட அதிகம் வாய்ப்பிருப்பதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன, இதன் காரணமாக திமுக அமைச்சரவை கூட மீண்டும் வாய்ப்பிருப்பதாகவே மேலும் சில தகவல்களும் தெரிவிக்கின்றன...

அது மட்டுமில்லாமல் வரும் நாட்களில் திமுகவின் கோட்டை எனப்படும் டெல்டா மாவட்டங்களில் வேறு யாத்திரை நுழையவிருப்பதால் தமிழகத்தில் வேறு பகுதிகளில் நடந்த யாத்திரையை விட டெல்டா பகுதிகளில் இன்னும் பிரம்மாண்டமாக இருக்கவேண்டும் என வேறு திட்டமிட்டு யாத்திரை ஏற்பாட்டாளர்கள் செயல்பட்டு வருவதும் கசிந்துள்ளது...

Next Story
கதிர் தொகுப்பு
Trending News