விவசாய கல்லூரி.. பெண்களுக்கு இலவச பஸ் பாஸ்.. தமாகா தேர்தல் அறிக்கை.!
தமிழக சட்டமன்ற தேர்தல் அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் இணைந்து போட்டியிடுகிறது. அக்கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் இணைந்து போட்டியிடுகிறது. அக்கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் 2021 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை ஆழ்வார்பேட்டை கட்சி அலுவலகத்தில் வெளியிட்டு பேசியதாவது: தமிழகத்தில் தமாகா போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு அருமையாக உள்ளது என கூறினார்.
அதிமுக ஆட்சியில் பல்வேறு சிறப்பான திட்டங்கள் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசின் திட்டங்களை செயல்படுத்த தமிழ் மாநில காங்கிரஸ் நடவடிக்கை எடுக்கும். இதனிடையே அவரது தேர்தல் அறிக்கையில், மகாத்மா காந்தி பெயரிலேயே விருது வழங்க வேண்டும்.
பள்ளி மாணவர்களுக்கு ஒழுக்கநெறி வகுப்புகள்.
65 வயது பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்துக்கான பாஸ். சாலையோரம் படுத்து உறங்குபவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தப்படும்.
மேலும், விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக மாவட்டத்தில் ஒரு விவசாய கல்லூரி உட்பட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளது.