மம்தா பிரதமர், அபிஷேக் பானர்ஜி அடுத்த முதலமைச்சர்: ட்வீட்டை நீக்கிய திரிணாமுல் எம்.பி.!
By : Thangavelu
வர உள்ள 2024ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தேர்ந்தெடுத்த குடியரசுத் தலைவரால் மம்தா பானர்ஜி பிரதமராக பொறுப்பேற்றுக் கொள்வார். அதன் பின்னர் மேற்கு வங்காள முதலமைச்சராக அபிஷேக் பானர்ஜி பதவியை ஏற்றுக்கொள்வார் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அபரூபா என்ற எம்.பி., ட்வீட் செய்திருந்தார்.
இந்நிலையில், ட்வீட் செய்த ஒரு மணி நேரத்திற்குள் அந்த ட்வீட்டை நீக்கியுள்ளார். அதாவது 2036ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் அபிஷேக் பானர்ஜி முதலமைச்சராக பதவி ஏற்பார் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் குணால் கோஷ் தனது ட்விட்டரில் பதிவிட்டு ஒரு நாழ் பின்னர் அபரூபா போடார் இக்கருத்தை கூறியுள்ளார். திங்கட்கிழமை குணால் கோஷ் பதிவிட்ட ட்வீட்டில், 2036 வரை வங்காளத்தின் முதலமைச்சராக மம்தா பானர்ஜியா நீடிப்பார் எனவும் என்னால் சொல்ல முடியும். ஆனால் 2036 ஆம் ஆண்டில், அபிஷேக் பானர்ஜி (மம்தா பானர்ஜியின் மருமகன்) முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், தனது ட்வீட் குறித்து விளக்கம் அளித்த போடார், 2024ம் ஆண்டு மம்தா பானர்ஜி பிரதமராக வருவதை நாங்கள் அனைவரும் பார்ப்பது உண்மைதான். அப்படி நடந்தால் அடுத்த முதலமைச்சர் அபிஷேக் பானர்ஜி மாநிலத்தின் முதலமைச்சர் பொறுப்பை ஏற்பார். இவ்வாறு அவர் தனது ட்விட்டர் பதிவில் விளக்கம் கொடுத்துள்ளார்.
Source, Image Courtesy: Puthiyathalaimurai