இலங்கைத் தமிழர்கள் நலனுக்காக மத்திய அரசு நடவடிக்கை: மைல்கல் என வர்ணித்த அண்ணாமலை!
இலங்கைத் தமிழரின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு தற்போது 4000 வீடுகளை கட்டி தரும் ஒப்பந்தத்திற்கு அண்ணாமலை வரவேற்பு.
By : Bharathi Latha
பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் மத்திய அரசின் தற்போதைய நடவடிக்கை ஒன்றை மிகவும் பாராட்டி இருக்கிறார். குறிப்பாக இலங்கை தமிழர் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு அசத்தலான ஒரு நடவடிக்கையை எடுத்து இருக்கிறது. இது தொடர்பாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். குறிப்பாக அந்த அறிக்கையில் அவர் கூறுகையில், இந்தியாவில் இருந்து சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் குடியேறிய மலை இயக்க தமிழர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற மத்திய அரசு சிறப்பான ஒரு நடவடிக்கை எடுத்து இருக்கிறது.
குறிப்பாக ஒரு வீடு என 28 லட்சம் ரூபாய் மதிப்பில் 4 ஆயிரம் வீடுகள் கட்டித் தருவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறது. மத்திய அரசு மற்றும் இலங்கை அரசுகளுக்கு இடையிலான இந்த ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாக இருக்கிறது. இந்தியாவின் நாகரீக இரட்டை நாடுகள் என்று இந்தியா மற்றும் இலங்கை இருந்து வருகிறது.
அந்த வகையில் இலங்கையில் வசிக்கும் தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் தொடர்ச்சியாக பல்வேறு நலத்திட்ட பணிகளில் முன்னெடுத்து செய்து வருகிறது.அந்த வகையில் இது மைல்கல் சாதனை ஆகும் என்றும் இலங்கை தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு நடவடிக்கையில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் பாராட்டி இருக்கிறார்.
Input & Image courtesy: Dinamalar