Kathir News
Begin typing your search above and press return to search.

எம்.பி. சீட் கிடைக்காத விரக்தியில் ஆர்.எஸ்.பாரதியின் பிராமின், நான் பிராமின் பேச்சு - அண்ணாமலை கண்டனம்!

எம்.பி. சீட் கிடைக்காத விரக்தியில் ஆர்.எஸ்.பாரதியின் பிராமின், நான் பிராமின் பேச்சு - அண்ணாமலை கண்டனம்!
X

ThangaveluBy : Thangavelu

  |  14 Jun 2022 3:45 PM IST

தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலைக்கு எச்சரிக்கை மற்றும் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய பேச்சுக்கு கண்டனம் வலுத்து வருகிறது.

தி.மு.க. முன்னாள் ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்தவர் ஆர்.எஸ்.பாரதி. இவர் சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், என்னுடைய ஜாதகம் மிகவும் மோசமான ஜாதகம் என்று அண்ணாமலைக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். நான் மட்டும் ஒரு வழக்கு தொடுத்தால் நீ உடனடியாக உள்ளே போய் விடுவாய். சின்னபையன் என்பதால் அண்ணாமலையை விட்டு வைத்துள்ளேன்.

மேலும், பிராமணர் அல்லாத தலைவராக இருப்பதால் அந்த உணர்வின் காரணமாக அண்ணாமலையை விட்டு வைக்கிறோம். அதே நேரத்தில் உடன் இருந்து கொண்டே குழி தோண்டுவதில் கைதேர்ந்தவர்கள் பிராமணர்கள். உங்களுக்கு எதிரான அனைத்து பிராமணர்களும் ஒன்று இணைந்து வேலையை தொடங்கி விட்டார்கள்.

இந்நிலையில், இந்த பேச்சுக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அதே போன்று பல பா.ஜ.க. நிர்வாகிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: இந்த வெற்று மிரட்டல்களால் எந்த பயனும் இல்லை, திரு ஆர்.எஸ் பாரதி அவர்களே! மாநிலங்களவைக்கு மீண்டும் சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்த உங்களுக்கு மிஞ்சியது ஏமாற்றமே; ஆதலால் சாதி வெறுப்பைத் விதைப்பதற்கு முயற்சி செய்து, காலம் கடத்திக் கொண்டு இருக்கின்றீர்கள். பாவம்! இவ்வாறு அவரது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Twitter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News