ஆளுநரை இன்று சந்திக்கிறார் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை!
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உடன் பாஜக தலைவர் அண்ணாமலை இன்று சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பில் திமுக அரசு பாஜக மற்றும் தேசிய வாதிகளை காவல்துறையை வைத்து கைது செய்து வருவது பேசப்படும் என கூறப்படுகிறது.
By : Thangavelu
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உடன் பாஜக தலைவர் அண்ணாமலை இன்று சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பில் திமுக அரசு பற்றி பேசப்படும் என கூறப்படுகிறது.
அதே போன்று சமீபத்தில் மதுரையில் பிரபல அரசியல் விமர்சகரும், யூடிபர் மாரிதாஸை போலீசார் கைது செய்துள்ளனர். திமுக ஐடிவிங்கை சேர்ந்தவர் புகார் அளித்த ஒரு மணி நேரத்தில் கைது செய்துள்ளது தமிழக போலீஸ். இந்த கைதுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் மற்றும் பாஜக நிர்வாகிகள் பலரும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
இதனிடையே நேற்று சென்னை கமலாலயத்தில் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திமுகவையும், மீடியாவையும் கடுமையான சாடினார். தேசத்திற்கு எதிரான கருத்தை தெரிவிப்பவர்கள் வெளியில் சுதந்திரமதாக நடமாடி வருகின்றனர். தேசிய வாதிகளை திமுகவின் ஏவல்துறையான காவல்துறையை வைத்து கைது செய்து வருகிறது. எனவே இது போன்ற சம்பவங்கள் தொடரும் என்றால் மிகப்பெரிய விளைவுகளை திமுக அரசு சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை பாஜக தலைவர் அண்ணாமலை சந்திக்க இருப்பதால் தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
Source: Maalaimalar
Image Courtesy: Twiter