முதல்ல இத பண்ணுங்க - முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை அட்வைஸ்
By : Thangavelu
தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்கு, கடந்த மே மாதம் 22ம் தேதி மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைவராகக் கொண்டும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நிலைக்குழு தலைவராக கொண்டும், நாட்டில் உள்ள மாநிலங்களுக்கு இடையில் கவுன்சில், மீண்டும் புனரமைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி இக்கவுன்சிலில் மாநில முதலமைச்சர்கள் மற்றும் மத்திய அமைச்சர்களும் உறுப்பினர்களாக இருப்பார்கள். மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டு ஒரு மாதத்திற்கு பின்னர் இதில் உள்ள உண்மைகளை தெரிந்து கொள்ளாமல் சும்மா அரைகுறை தகவல்களுடன் இதுவரையிலும் நடைமுறையில் இல்லாத தகவல்களை முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து பிரதமரின் பார்வைக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
To appease a known select few, @CMOTamilnadu has written a letter seeking that the Interstate council be regularly convened, not knowing after 2006 till 2014, this council was not convened even once.
— K.Annamalai (@annamalai_k) June 18, 2022
Strongly suggest the @arivalayam govt to practice what they preach. https://t.co/BTJtcfI5xb pic.twitter.com/BnlL0bB37O
அறிவிப்பு அரசியலில் தாங்கள் காட்டும் ஆர்வம் இந்தக் கடிதத்தின் மூலமாக வெளிப்படுகிறது. கடந்த 1990ம் ஆண்டில் இந்த கவுன்சில் தொடங்கப்பட்டதாக நீங்களே தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். அதன் பின்னர் கடந்த 31 ஆண்டுகளாக இந்த கவுன்சில் 11 முறை மட்டுமே கூடியிருப்பதை தாங்களின் படப்படப்பில் மறந்து போய் விட்டீர்களா? இல்லை பரபரப்பிற்காக மறைத்துள்ளீர்களா? ஆண்டுக்கு மூன்று முறை இந்த கவுன்சில் கூட வேண்டும் என்ற வேண்டுகோளை வைப்பதற்கு முன்பாக தாங்கள் அறிந்த கொள்ள வேண்டிய மிக முக்கிய தகவல் காத்திருக்கிறது.
கடந்த காலத்தில் காங்கிரஸ் கட்சியில் அமைச்சரவையில் அங்கம் வகித்த தி.மு.க. அப்போது ஒருமுறை கூட இக்கூட்டத்தை கூட்டவில்லை. அப்போது மத்தியிலும், மாநிலத்திலும் கவுன்சில் கூட்டத்தை கூட்டுவதற்கு எந்த ஒரு முயற்சியும் எடுக்காமல், கவுன்சிலுக்கு மூடுவிழா நடத்தியதே தி.மு.க.வும், காங்கிரஸ் கட்சியும்தான். இதனை தங்களுக்கு நினைவு கூருகிறேன்.
இதற்கிடையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரச அமைந்த பின்னர் கடந்த 16.07.2016 அன்று மீண்டும் இக்கவுன்சில் கூட்டத்திற்கு உயிர் கொடுக்கப்பட்டது. கடந்த எட்டு ஆண்டுகால ஆட்சியில் மத்திய அரசு மாநிலங்களுங்களுக்கு இடையிலான புதிய கவுன்சில்களை உருவாக்கியது. இதற்காக அனைத்து மாநிலங்களின் கருத்துக்களையும் கேட்டறிந்தது. மிகச்சிறந்த கூட்டாட்சி தத்துவத்திற்கு இதனை விட சிறந்த உதாரணம் இருக்க முடியாது. எனவே தொடர்ந்து கவுன்சில் கூட்டத்தை புறக்கணிக்கும் தி.மு.க. அரசு கூட்டாட்சித் தத்துவத்திற்கு வகுப்பு எடுப்பது என்பது வேடிக்கையாக உள்ளது. இவ்வாறு அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Source, Image Courtesy: Asianetnews