Kathir News
Begin typing your search above and press return to search.

'திருமாவளவன் இடது, வலதுகை எல்லாம் வாங்க, நாங்க குடுக்குற புத்தகத்தை வாங்கிட்டு போகலாம்' - வி.சி.கவினரை வரவேற்ற அண்ணாமலை

திருமாவளவன் இடது, வலதுகை எல்லாம் வாங்க, நாங்க குடுக்குற புத்தகத்தை வாங்கிட்டு போகலாம் - வி.சி.கவினரை வரவேற்ற அண்ணாமலை

ThangaveluBy : Thangavelu

  |  25 April 2022 1:30 PM GMT

விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் பாஜக அலுவலகத்திற்கு வந்து புத்தகங்களை கொடுக்கலாம் என்று அக்கட்சியை சேர்ந்த தமிழக மாநில தலைவர் அண்ணாமலை தற்போது அழைப்பு விடுத்துள்ளார்.

அதாவது இந்து மதத்தின் புதிர்கள் நூலை படித்துக்காட்டுவதற்கு நேரம் அளிக்க முடியுமா என்று பாஜக தலைவர் அண்ணாமலைக்கு வி.சி.க கட்சியை சேர்ந்த சிலர் கோரிக்கை விடுத்தனர். சமீபத்தில் அம்பேத்கரின் கனவை பிரதமர் மோடி நனவாக்கி வருகின்றார் என்று இசைஞானி இளையராஜா கூறியிருந்தார். இதற்கு வி.சி.க, தி.க., காங்கிரஸ் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றது. அவர்கள் அனைவருக்கும் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பதிலடி அளிக்கும் விதமாக தற்போது ஒரு ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, 'அண்ணன் தொல் திருமாவளவன் அவர்களுடைய இடதுகை, வலதுகை அனைவரும் நம்முடைய அலுவலகத்துக்கு வந்து அவர்கள் விரும்பும் புத்தகங்களை 26 ம் தேதி மதியம் 12 மணிக்கு கொடுக்கலாம். நம் அலுவலகத்தில் தயாராக இருக்கக்கூடிய புத்தகங்களையும் வாங்கி செல்லலாம். அதன் பின்பு அண்ணன் தொல் திருமாவளவனிடம் நேரத்தையும், தேதியும் அவர்கள் கூட்டாக அமர்ந்து முடிவு செய்து சொல்லட்டும், தயாராக சொல்லும் இடத்திற்கு வருகின்றேன்.

அனைத்து விடுதலை சிறுத்தை கட்சியின் சகோதர சகோதரிகளை நமது அலுவலகத்திற்கு 26 ஆம் தேதி வரவேற்கின்றேன், உங்களிடம் புத்தகம் இருந்தால் கொடுப்பதற்கு! தலைப்பு: அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய சித்தாந்தத்தை முழுமையாக பின்பற்ற கூடிய தலைவர் பாரத பிரதமர் மோடி அவர்கள்" இவ்வாறு அவரது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.



Source,Image Courtesy: Twiter




Next Story
கதிர் தொகுப்பு
Trending News