Kathir News
Begin typing your search above and press return to search.

2ஜி் ஊழலில் திழைத்த தி.மு.க, காங்கிரஸ் தமிழகத்திற்கு வேண்டவே வேண்டாம் - பா.ஜ.க எம்.பி பொளேர்!

2ஜி் ஊழலில் திழைத்த தி.மு.க, காங்கிரஸ் தமிழகத்திற்கு வேண்டவே வேண்டாம் - பா.ஜ.க எம்.பி பொளேர்!

Saffron MomBy : Saffron Mom

  |  6 March 2021 4:50 AM GMT

சென்னை கோயம்பேட்டில் உள்ள பா.ஜ.க தேர்தல் அலுவலகத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பா.ஜ.க MP ராஜீவ் சந்திரசேகர் கலந்துக்கொண்டு பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார். இதில் தமிழக பா.ஜ.க துணைத்தலைவர் சக்கரவர்த்தி, பா.ஜ.க தமிழக செய்தித் தொடர்பாளர் S G சூர்யா உட்பட ஏராளமான பா.ஜ.கவினர் கலந்துக் கொண்டனர்.

அப்போது பேசிய திரு ராஜீவ் சந்திரசேகர் முக்கியமான கருத்துக்களை முன்வைத்தார். அதன் சாராம்சம்: "சமீபத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின், சிங்காரச் சென்னையைப் பற்றி பேசியதையும் ராகுல் காந்தி ஒரு பள்ளியில் நடனமாடியதையும் நான் கண்டேன். தமிழ் மக்களின் ஓட்டுகளை பெறுவதற்காக இத்தகைய நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் காங்கிரஸ், தி.மு.க ஏற்கனவே கூட்டணி வைத்துள்ளது. அவர்களுடைய கடந்த கால 'சாதனைகளை' மக்களிடம் புரிய வைக்க வேண்டியது அவசியம்.

தி.மு.க தலைவர் ஸ்டாலின் சென்னையில் 11 எம்.எல்.ஏ-க்களை வைத்துக்கொண்டு சிங்காரச் சென்னையை பற்றி பேசுகிறார். ஐந்து வருடம் காங்கிரஸுடன் ஆட்சி புரிந்து புதுச்சேரியை சீரழிவிற்கு உள்ளாக்கி விட்டு தற்போது சிங்காரச் சென்னை கொண்டு வருவோம் என்று பேசுகிறார். காங்கிரஸுடன் கூட்டணி வைத்து பத்து வருடங்களில் ஊழல் மூலம் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் சிதைவுக்கு உள்ளாக்கி நாட்டின் வங்கி சிஸ்டத்தையே பாதிப்பு அடைய வைத்துள்ளனர்.

பத்து வருடங்களாக கூட்டாளிகளாக இருந்து தாங்கள் ஆட்சி புரிந்ததைப்பற்றி அவர்கள் ஏன் பேச மறுக்கிறார்கள்? நாம் பேச வேண்டியதெல்லாம் 2004 முதல் 2014 வரை அவர்கள் நடத்திய மோசமான ஆட்சியைப் பற்றித் தான், அப்போது நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் சீரழித்து விட்டனர். 2004-ஆம் ஆண்டில் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் விட்டுச் சென்றது ஒரு வலுவான பொருளாதாரத்தை.

2005-இல் முக்கிய காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் கூட இது நம் நாடு எப்போதும் கண்டிராத மிக வலுவான பொருளாதாரம் என்று குறிப்பிட்டிருந்தார். அவர்கள் இதைப் பற்றி ஏன் பேச மறுக்கிறார்கள்? காங்கிரஸ், தி.மு.க ஆட்சியில் பேச வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் ஸ்பெக்ட்ரம். (அலைக்கற்றை). தற்பொழுது கொரானா வைரஸினால் ஏற்பட்ட ஊரடங்கு பிரச்சனைகளை காட்டிலும் 2008-ஆம் ஆண்டு பொருளாதார சீரழிவு தாக்கங்கள் மிக அதிகமாக இருந்தது. இந்நிலையில் காங்கிரசும் தி.மு.க-வும் சேர்ந்து விலைமதிப்பில்லாத அலைக்கற்றைகளை சில கார்ப்பரேட்டுகளுக்கு இலவசமாக கொடுக்க முடிவு செய்தது. நான் அப்போது பாராளுமன்ற உறுப்பினராக இருந்தேன்.

இந்த விஷயத்தை பாராளுமன்றத்தில் எழுப்பவும் செய்தேன். இதுகுறித்து CAG அறிக்கை, உச்ச நீதிமன்ற விளக்கங்கள் ஆகிவற்றை குறித்து நான் பாராளுமன்றத்தில் பேசினேன். தற்பொழுது இந்த வழக்கு குறித்து உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையினை நான் உங்களுக்கு மேற்கோள் காட்டுகிறேன். "இந்த அரசாங்கம் அலைக்கற்றையை இவ்வாறு வழங்கியிருப்பது அரசியலமைப்புக்கு எதிரானது. இது ஒரு தேசிய சொத்தை கிட்டத்தட்ட பரிசாக வழங்கியதற்கு சமமாகும்."

2009-2010-ல் மக்களின் இந்த சொத்துக்களை எடுத்து காங்கிரசும் தி.மு.க-வும் சில கார்ப்பரேட்டுகளுக்கு அவர்களின் நன்மைக்கு வழங்கி விட்டன. நரேந்திர மோடி அவர்களின் பா.ஜ.க அரசாங்கத்தை நீங்கள் இதனுடன் ஒப்பிடும் பொழுது, இந்திய அரசாங்கம் இரண்டு முறை அலைக்கற்றைகளை ஏலத்தின் வழியாக மட்டுமே விற்றுள்ளது. 2016-இல் கிட்டத்தட்ட 60,000 கோடி ரூபாய்க்கு பெற்றம் ஏலத்தில் விடப்பட்டது. மூன்று நாட்களுக்கு முன்னால் மறுபடியும் இதே அலைக்கற்றை 77 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விடப்பட்டது. இன்னும் ஒரு முறை தி.மு.கவும் காங்கிரஸும் தங்களிடம் ஓட்டு கேட்டு வந்தால் அவர்கள் 2010-இல் நடந்து கொண்ட விதத்தைப் பற்றியும், அவர்களுடைய ஆட்சியில் நாட்டில் ஊழலை விதைத்ததை பற்றியும் மக்கள் நினைவில் கொள்ள வேண்டும். தற்பொழுது அதே இந்திய அரசாங்கம் மக்களின் நலனுக்காக இந்த சொத்துக்களை எப்படி மீட்டு வந்திருக்கிறது என்பதையும் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் தமிழ்நாட்டில் ரைசிங் சன் (உதயசூரியன் அல்ல) இது ரைசிங் சன்ஸ் (மகன்கள்) இது நம் தமிழ் நாட்டின் முன்னேற்றத்துக்கானது அல்ல.

ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் முன்னேற்றத்துக்கானவர்கள் அவர்கள், கொள்ளைக்கான அரசியலை முன்னெடுக்கிறார்கள். நாங்கள் வளர்ச்சிக்கான அரசியலை முன்னெடுக்கிறோம். இதுகுறித்து அமித் ஷா கூட சமீபத்தில் தமிழ்நாட்டில் 2ஜி, 3ஜி, 4ஜி என்று தலைமுறைகள் வாரியாக நடக்கும் அரசியலை பற்றி பேசியிருந்தார்." என்று கூறினார். இதற்கு பிறகு பத்திரிகையாளர்கள் கூட்டணி, அரசியல் நிலவரம் குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News