தேர்தலில் கொடுத்த வாக்குறுதிபடி பெட்ரோல், டீசல் விலையை தமிழக அரசு குறைக்க வேண்டும்.. வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.!
மத்திய அரசு இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்து வழங்கி வருகிறது. ஆனால் மாநில அரசுகள் மத்திய அரசின் வரியைவிட மிக கூடுதலாக விதித்து மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கிறது.
By : Thangavelu
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுகின்ற வகையில் தமிழக அரசு பெட்ரோல், டீசல் வரியை குறத்து மக்களின் துன்பத்தை போக்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார்.
பாஜக கோவை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்ட செயற்குழு கூட்டம் பொள்ளாச்சியில் நடந்தது. இந்த கூட்டத்தில் பாஜக தேசிய மகளிர் அணியின் தலைவியும் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில் அவர் கூறியதாவது: மத்திய அரசு இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்து வழங்கி வருகிறது. ஆனால் மாநில அரசுகள் மத்திய அரசின் வரியைவிட மிக கூடுதலாக விதித்து மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கிறது.
பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர வேண்டும் என்பது பாஜகவின் நிலைப்பாடு. ஜிஎஸ்டியில் கொண்டு வரப்பட்டால் வரி குறையும், மாநில அரசு வரி வருவாய்க்கும் ஜி.எஸ்.டி. கொடுக்கலாம்.
தற்போதைய சூழ்நிலையில், ஒடிசா போன்ற மாநிலங்கள் வரி குறைத்து பெட்ரோல், டீசல் விலையை குறைத்து வழங்குகிறது. தமிழக மக்களின் துன்பங்களை போக்குவதற்கு, திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிபடி பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.