Kathir News
Begin typing your search above and press return to search.

#TNwelcomeschanakya சாணக்கியா.. ட்விட்டரில் டிரெண்டிங்.!

#TNwelcomeschanakya சாணக்கியா.. ட்விட்டரில் டிரெண்டிங்.!

#TNwelcomeschanakya சாணக்கியா.. ட்விட்டரில் டிரெண்டிங்.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  21 Nov 2020 3:43 PM GMT

தமிழகத்திற்கு அரசு முறை பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்துள்ளார். பல்வேறு அரசு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இவரது வருகை தமிழக சட்டப்பேரவை தேர்தலில் கண்டிப்பாக எதிரொலிக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். அமித்ஷா வருகையால் திமுகவினர் கலக்கம் அடைந்துள்ளனர். எங்க ஸ்டாலின் முதல்வர் கனவு பறிபோகுமா என்று புலம்பி தள்ளுவதை பார்க்க முடிகிறது.


இந்நிலையில், தமிழ்நாட்டில் அமித்ஷாவின் வருகை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சிகள் அமித்ஷா வின் வருகையை எதிர்த்து கோ பேக் அமித்ஷா என்ற ஹேஷ்டாக்கை எதிர்க்கட்சி ஐடி விங் செயல்பட்டு கொண்டிருக்கிறது.


அதனை முறியடிக்கும் வகையில் பாஜகவினர் பதிலடி கொடுத்துள்ளனர். டிஎன் வெல்கம்ஸ் அமித்ஷா என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்டிங் செய்து வருகின்றனர். திமுகவுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். பிரதமரின் நம்பிக்கைக்குரிய நவீன இந்தியாவின் இரும்பு மனிதர், தமிழ்நாட்டு அரசியலை மாற்றியமைக்க வருகை தரும் அமித்ஷாவை வரவேற்கிறோம் என பாஜகவினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் ட்ரெண்டிங் செய்யப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News