பீகாரில் ட்ரெண்டாகும் #TNWithStalin - ட்வீட்களை விலைக்கு வாங்கும் தி.மு.க!
பீகாரில் ட்ரெண்டாகும் #TNWithStalin - ட்வீட்களை விலைக்கு வாங்கும் தி.மு.க!
![பீகாரில் ட்ரெண்டாகும் #TNWithStalin - ட்வீட்களை விலைக்கு வாங்கும் தி.மு.க! பீகாரில் ட்ரெண்டாகும் #TNWithStalin - ட்வீட்களை விலைக்கு வாங்கும் தி.மு.க!](https://kathir.news/static/c1e/client/83509/migrated/920d821567a0bca32d4f29a82bc04443.jpg)
இந்திய அளவில் ட்விட்டர் ட்ரெண்டிங் வைத்துதான் அரசியலின் அன்றைய நிகழ்வுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன. அந்த வகையில் தமிழகமும் விதிவிலக்கல்ல. ட்விட்டரில் கூறும் கருத்துக்கள் தொலைக்காட்சி வரை விவாதம் ஆவதும். செய்தித்தாள்களில் கூட அவைகள் இடம்பிடிப்பதும் வாடிக்கையாகிவிட்டது. அந்த வகையில் இன்றைய ஒரு நிகழ்வை ட்விட்டர் ட்ரெண்டாக மாற்றியுள்ளனர் நெட்டிசன்கள்.
இன்று பசும்பொன்.முத்துராமலிங்க தேவர் அவர்களின் 113வது ஜெயந்தி விழா நடைபெற்று வருகிறது. இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முதல் தமிழகத்தின் முக்கிய அரசியல்வாதிகள் அனைவரும் கலந்துகொண்டு முத்துராமலிங்க தேவர் அவர்களின் திருவுருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்த விழாவில் பங்கேற்ற தி.மு.க தலைவர் ஸ்டாலினும் சென்றுள்ளார். அவரது வருகையை எதிர்க்கும் விதமாக ட்விட்டரில் #GoBackStalin என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.
இந்நிலையில் #TNWithStalin என்ற ஹாஷ்டாக் தி.மு.க. தரப்பில் மாலை முதல் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. இதில் பதிவு செய்யப்படும் டிவீட்டுக்கள் பீகார் மாநிலத்தில் பதிவுசெய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகிறது. iPAC தலைவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவராக இருப்பதால் அவரின் குழு இந்த வேலையை செய்கிறதா என்ற கேள்வி எழுகிறது.