Kathir News
Begin typing your search above and press return to search.

'இன்னைக்கு ரத்தம் பார்க்காம போறதில்லை' - சத்திய மூர்த்தி பவனில் உருட்டுக்கட்டைகளால் பேசிக்கொண்ட காங்கிரஸ் தொண்டர்கள்

சென்னை காங்கிரஸ் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் தொண்டர்களிடையே அடிதடி ஏற்பட்டுள்ளது.

இன்னைக்கு ரத்தம் பார்க்காம போறதில்லை - சத்திய மூர்த்தி பவனில் உருட்டுக்கட்டைகளால் பேசிக்கொண்ட காங்கிரஸ் தொண்டர்கள்
X

Mohan RajBy : Mohan Raj

  |  16 Nov 2022 9:04 AM IST

சென்னை காங்கிரஸ் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் தொண்டர்களிடையே அடிதடி ஏற்பட்டுள்ளது.

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரை மாற்றக் கோரி தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியின் காரை மறித்து நடைபெற்ற போராட்டத்தில் சிலர் காயமடைந்தனர். சென்னை காங்கிரஸ் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கே.எஸ்.அழகரின் ஆதரவாளர்கள் மோதல் என தகவல் கிடைத்துள்ளது.

காங்கிரஸ் அலுவலக வளாகத்தில் இருதரப்பிற்கு இடையான மோதலில் சிலர் காயமடைந்து ரத்தம் ஒழுக ஒழுக நின்றனர், உருட்டு கட்டையால் அடித்துக் கொண்டதில் மூன்றுக்கும் மேற்பட்டோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பதட்டமான சூழல் நிலவுவதால் அசம்பாவித்தை தவிர்க்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கட்சி தொண்டர்களுக்குள்ளேயே அடிதடி செய்து கொள்ளும் நிலையால் சத்தியமூர்த்தி பவனில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.


Source - Polimer News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News