Kathir News
Begin typing your search above and press return to search.

அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அஞ்சலி !

அவரது உடலுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில், இன்று காலை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் சேகர் பாபு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அஞ்சலி !

ThangaveluBy : Thangavelu

  |  6 Aug 2021 4:50 AM GMT

உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அதிமுக அவைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான மதுசூதனன் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அவர் உடல் வண்ணாரப்பேட்டை உள்ள அவரது இல்லத்துக்கு ஆம்புலன்ஸ் மூலமாக எடுத்து செல்லப்பட்டது.

அவரது உடலுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில், இன்று காலை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் சேகர் பாபு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

இதனை தொடர்ந்து மதுசூதனன் உடல் இன்று காலையில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு பேசின் பிரிட்ஜ் பகுதியில் உள்ள மூலக்கொத்தளம் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

Source: Dailythanthi

Image Courtesy: News 18 Tamilnadu

https://www.dailythanthi.com/News/TopNews/2021/08/06084453/Tribute-to-Madhusudhanans-body-in-the-presence-of.vpf

Next Story
கதிர் தொகுப்பு
Trending News