சீதாராம் யெச்சூரிக்கு செம்மையாக பதிலடி கொடுத்த திரிபுரா பா.ஜ.க முதல்வர் - வைரலாகும் ட்வீட்.!
சீதாராம் யெச்சூரிக்கு செம்மையாக பதிலடி கொடுத்த திரிபுரா பா.ஜ.க முதல்வர் - வைரலாகும் ட்வீட்.!
By : Saffron Mom
சமீபத்தில் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட விவசாய சட்டத்தின் சீர்திருத்தங்களை தாங்களும் நடைமுறைப்படுத்துவோம் என்று எதிர்க்கட்சிகள் முன்பு வாக்குறுதி அளித்திருந்தனர். ஆனால் தற்போது அதே சீர்திருத்தங்களை மோடி அரசாங்கம் கொண்டு வருகிறது என்ற ஒரே காரணத்திற்காக எதிர்ப்பது மட்டுமல்லாமல், விவசாயிகளின் போராட்டத்தையும் பொய்களைப் பரப்பித் தூண்டிவிடுகின்றன.
இதன் முன்னிலையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி, ஆம் ஆத்மி கட்சிகளும் செயல்பட்டு வருகின்றன. இதைக் குறித்து பிரதமர் மோடி கூறுகையில், எதிர்க்கட்சிகள் பொய்கள் மேல் பொய்களை பரப்பி வருவதாகவும் புதிய விவசாய சட்டங்கள் பழைய நடைமுறைகளை நீக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி, பிரதமர் மோடி பேசியதை குறிப்பிட்டு, "அப்படி என்றால் MSP (குறைந்த பட்ச ஆதார விலை) ஆகியவற்றிற்கான உரிமைகளை பாதுகாக்க கோரி ஏன் ஒரு சட்டத்தை நடைமுறைப்படுத்த கூடாது? இதை நாங்கள் 2017லேயே கேட்டிருந்தோம். இந்த விவசாய சட்டங்களை திரும்பப் பெறுக" என்று கேட்டார்.
"Varanasi: PM Modi says we are spreading lies, lies & more lies” and Agri laws “don’t remove earlier system”.
— Sitaram Yechury (@SitaramYechury) November 30, 2020
Then why does he stubbornly refuse to enact a law “Right to sell at MSP” that we proposed way back in 2017?
Repeal Agri laws.#SpeakUpForFarmershttps://t.co/Tx420VHJ20
தற்போது நடந்து வரும் விவசாயிகளின் போராட்டத்தில் இருந்து கொஞ்சம் அரசியல் ஆதாயம் தேடுவதற்காக எதிர்க்கட்சிகள் தங்களின் முந்தைய நடவடிக்கைகளையும் செயல்திட்டங்களையும் மீறி இஷ்டத்திற்கு கருத்து தெரிவித்து வருகின்றனர்.இவ்வாறே கம்யூனிஸ்ட் கட்சியும் கருத்து தெரிவித்தது. கடைசியில் ஏடாகூடமாக போய் முடிந்தது.
திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் டெப் எச்சூரியின் டீவீட்டிற்கு பதிலளித்து, "25 வருடங்களுக்கும் மேலாக திரிபுராவில் ஒரு கம்யூனிஸ்ட் கவர்மெண்ட் இருந்தது.ஆனால் முதல்முறையாக குறைந்தபட்ச ஆதரவு விலையை அறிமுகப்படுத்தியது 2019ல் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசாங்கம். நீங்கள் வெறும் பொய், மற்றும் பொய்களை மட்டுமே பரப்புகிறீர்கள்" என்று அவர் கொடுத்த பதிலடி தற்பொழுது இன்டர்நெட்டில் வைரல் ஆகி வருகிறது.
For more than 25 years, Tripura had a Communist government and the first time MSP got implemented was in the year 2019 under the Modi Ji led BJP Govt.
— Biplab Kumar Deb (@BjpBiplab) November 30, 2020
once again you are just spreading lies, lies and more lies. https://t.co/f7CTP4svLB
2018ஆம் ஆண்டிற்கு முன்னால் திரிபுராவில் உள்ள விவசாயிகள் மிகவும் மலிவான விலைக்கு தங்கள் பொருட்களை விற்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டனர். மாநில அரசாங்கம் அவர்களுடைய நெல்லை கிலோவுக்கு 17.50 ரூபாயில் கொள்முதல் செய்தனர். 2019 ஆம் ஆண்டில் இந்திய உணவு கூட்டுத்தாபனம் நேரடியாக 50,000 மெகா டன் நெல்லை 18 ரூபாய் 50 காசுகளுக்கு வாங்கியது.
தாங்கள் ஆண்ட மாநிலத்தில் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை பலகாலமாக வழங்காமல் விட்டுவிட்டு, தற்போது பா.ஜ.க விவசாயிகளின் நலனுக்காக செயல்படுத்தி வரும் திட்டங்களை கம்யூனிஸ்ட் கட்சிகள் விமர்சிப்பது பெரும் நகைமுரண் ஆகும்.