துருக்கி துயரம் - முதல் உலகத்தலைவராக ஆதரவுக்கரம் நீட்டிய பிரதமர் மோடி
துருக்கியின் மாபெரும் துயரத்திற்கு முதல் உலகத்தலைவராக பிரதமர் மோடி ஆதரவுக்கரம் நீட்டியுள்ளார்.

By : Mohan Raj
துருக்கியின் மாபெரும் துயரத்திற்கு முதல் உலகத்தலைவராக பிரதமர் மோடி ஆதரவுக்கரம் நீட்டியுள்ளார்.
துருக்கியின் நாட்டோட காசியண்டெப் மாகாணம், நுர்தாகி நகரில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவில், இன்னைக்கு அதிகாலைல உள்ளூர் நேரப்படி 04:17 மணிக்கு சுமார் 17.9 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது.
நிலநடுக்கம் ஏற்பட்ட அடுத்த 15 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் மற்றொரு 6.7 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நில அதிர்வால் துருக்கி மற்றும் சிரியாவின் எல்லைப்பகுதி எல்லாம் குடியிருப்பு கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின.
துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சிறப்பு பயிற்சி பெற்ற நாய் படைகளுடன் 100 பேர் கொண்ட NDRF குழுக்கள் விமானம் மூலம் அனுப்பப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் உதவ NDRF மற்றும் மருத்துவக் குழுக்களை அனுப்புவதாகவும் அறிவித்துள்ளார்.
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை சமாளிக்க அனைத்து உதவிகளையும் வழங்குமாறு பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பு குடுத்த அடுத்த நொடியே பிரதமரின் முதன்மை செயலாளர் டாக்டர் பி.கே.மிஸ்ரா உடனடியா நிவாரண உதவிக்கு என்ன பண்ணனும் அப்டின்னு அவசர ஆலோசனை கூட்டத்தை கூட்டி வேலைய அரமிச்சுட்டாங்க மோடி அலுவலக அலுவலர்கள்.
துருக்கி குடியரசின் அரசாங்கத்தோட ஒருங்கிணைப்புல NDRF மற்றும் மருத்துவக் குழுக்களின் தேடல் மற்றும் மீட்புக் குழுக்கள் மற்றும் நிவாரணப் பொருட்களுடன் உடனடியாக அனுப்பப்படும் அப்டின்னு அந்த ஆலோசனை கூட்டத்துல முடிவு பண்ணி முதல் வேலைய முதற்கட்ட ஆட்களை அனுப்பும் பணியை பிரதமர் மோடி அலுவலகம் முடுக்கிவிட்டதன் காரணமா வேலை துரிதமா நடக்க ஆரமிச்சுட்டு.
இந்த குழுவில் என்ன போக போகுது அப்படின்ற தகவலும் 30 நிமிடத்திலேயே முடிவு எடுக்கப்பட்டு பட்டியலும் தயாராகிட்டு. இந்த குழுவுல பிரத்யேக பயிற்சி பெற்ற நாய் படைகள், மீட்பு குழுவுக்கு தேவையான உபகரணங்கள், இதுமட்டுமில்லாம 100 பணியாளர்களை கொண்ட NDRF இன் இரண்டு குழுக்கள் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக ராணுவ விமானத்துல பறக்க தயாராகிட்டு. அநேகமா இந்த வீடியோ'வ நீங்க பார்த்துட்ருக்க நேரம் அந்த படைகள் துருக்கி போய் சேர்ந்துருக்கும். அந்த அளவுக்கு பிரதமர் மோடி செம்ம வேகமா நடவடிக்கை எடுத்துருக்காங்க.
மேலும் அடுத்த குழுவா துருக்கி பூகபத்துல அடிபட்டவங்களுக்கு சிகிச்சை அளிக்க பயிற்சி பெற்ற மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவர்களுடன் மருத்துவக் குழுக்கள் அத்தியாவசிய மருந்துகளுடன் தயார் நிலையில் இருக்கு, இந்த குழு அடுத்தபடியா உடனே இந்தியாவில் இருந்து கிளம்புகின்றன. மேலும் உணவு பொருள்கள் இருக்கும் மீட்புப்படை 3வது குழுவா புறப்பட தயாரா இருக்காங்க.
இது மட்டுமல்லாம் துருக்கி அதிபருக்கு ட்விட்டர் ல பிரதமர் மோடி 'துருக்கியில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதம் மற்றும் உடமைச் சேதங்களால் வேதனை அடைந்துள்ளேன். உயிரிழந்த குடும்பத்தினருக்கு இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். இந்தியா ஒற்றுமையுடன் நிற்கிறது. துருக்கி மக்களுடன் இந்த சோகத்தை சமாளிக்க அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக உள்ளது’ என்று அப்டின்னு குறிப்பிட்டு முதல் உலக தலைவரா ஆறுதல் சொல்லிருக்காரு.
