Kathir News
Begin typing your search above and press return to search.

தூத்துக்குடியில் வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வாக்காளர்களிடம் விழிப்புணர்வு முகாம்.!

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரம் செயல்முறை மற்றும் வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தூத்துக்குடியில் வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வாக்காளர்களிடம் விழிப்புணர்வு முகாம்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  5 March 2021 10:24 AM IST

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரம் செயல்முறை மற்றும் வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. இதனால் தமிழகத்தில் அனைத்து முன்னேற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து வருகின்றது. அதில் முதல் கட்டமாக வாக்குப்பதிவு இயந்திரம் சரிபார்த்தல், பூத் அமைப்பது, வாக்கு எண்ணிக்கை மையங்களை தயார் படுத்துதல் உள்ளிட்ட பணிகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.





இந்நிலையில், மாவட்ட தேர்தல் அலுவலர் செந்தில்ராஜ் உத்திரவின்பேரில் தூத்துக்குடி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிம்ரான்ஜித்சிங் கலோன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜஸ்டின் மேற்பார்வையில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் வாக்குபதிவு இயந்திரம் செயல்முறை விழிப்புணர்வு முகாம் வருவாய்துறை அலுவலர்களால் நடத்தப்பட்டு வருகிறது.




இந்த முகாமில் ஏராளமான வாக்காளர்கள் கலந்து கொண்டு செய்முறை விளக்கத்தை பார்வையிட்டு சென்றனர். அது மட்டுமின்றி 100 சதவீத வாக்குப்பதிவு செய்ய வலியுறுத்தியும் தேர்தல் ஆணையம் சார்பில் வாக்களார்களிடம் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News