உதயநிதி தவறாக பேசுவதை பொறுத்துக்கொள்ள முடியாது.. கோகுல இந்திரா.!
உதயநிதி தவறாக பேசுவதை பொறுத்துக்கொள்ள முடியாது.. கோகுல இந்திரா.!
By : Kathir Webdesk
திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதே போன்று அவரது கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பெண்களிடம் இரட்டை அர்த்தத்தில் பேசி வருகிறார். கனிமொழி உள்ளிட்டோரும் பெண்களை பற்றி இழிவாக பேசி வருகின்றனர்.
இந்நிலையில், உதயநிதிக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா பேசியதாவது: உதயநிதி சசிகலாவை தவறாக பேசுவதை பொறுத்துக்கொள்ள முடியாது என்றார்.
மேலும் கட்சியின் தலைவராக இருந்தவர் சசிகலா. அவர் எங்கிருந்தாலும் நாங்கள் மரியாதையுடன் போற்றுவோம். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் தவ வாழ்க்கை வாழ்ந்தவர். அதே நேரத்தில் உதயநிதிக்கு எதிராக முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் போராட்டம் நடத்தச் சொல்லவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.