Kathir News
Begin typing your search above and press return to search.

8 மணி விழாவிற்கு 12 மணிக்கு அசால்ட்டாக வந்த உதயநிதி - கேட்பாரற்று வெயிலில் உட்காரவைக்கப்பட்ட குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள்

அமைச்சர் உதயநிதி வருகைக்காக நீண்ட நேரம் குழந்தைகள் வெயிலில் காக்க வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

8 மணி விழாவிற்கு 12 மணிக்கு அசால்ட்டாக வந்த உதயநிதி - கேட்பாரற்று வெயிலில் உட்காரவைக்கப்பட்ட குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள்
X

Mohan RajBy : Mohan Raj

  |  26 Dec 2022 8:34 AM IST

அமைச்சர் உதயநிதி வருகைக்காக நீண்ட நேரம் குழந்தைகள் வெயிலில் காக்க வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை நேரு ஸ்டேடியத்தில் பழைய சிந்தடிக் ட்ராக் உள்ளிட்ட மராமத்து பணிகளுக்கு அடிக்கல் நாட்ட அமைச்சர் உதயநிதி வர தாமதமானதால் 3 மணி நேரத்திற்கு மேலாக குழந்தைகள் வெயில் காத்திருந்தனர்.

கோவை நேரு ஸ்டேடியத்தில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் 6.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிந்தடிக் ட்ராக் மற்றும் 6.15 லட்சம் மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் மராமத்து பணிகளுக்காக துவக்க விழா நேற்று நடந்தது. இதற்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் உதயநிதி வருகை புரிந்தார். அவர் வருகை முன்னிட்டு பல்வேறு விளையாட்டுகளில் வெற்றி பெற்ற சிறுவர்களை காலை எட்டு மணிக்கே சேகரித்து அழைத்து வந்து அமர வைத்தனர்.

அமைச்சர் உதயநிதி 12 மணிக்கு ஸ்டேடியம் வந்தால் குழந்தைகள் மாற்றுத்திறனாளி வீரர்கள் கல்லூரி மாணவர்கள் ஆகியோர் பந்தல் போடாமல் வெட்ட வெளியில் வெயிலில் இருக்கைகளில் அமரவைக்கப்பட்டிருந்தனர். இதனால் அமைச்சர் வரும் வரை குழந்தைகள் வெயிலில் வாடினர்கள், அமைச்சர் ஆக பதவி ஏற்று உதயநிதி வரும் நிகழ்ச்சி என்பதால் போலீசாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

அமைச்சரை வரவேற்க குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் வெட்டவெளியில் வெயிலில் உட்காரப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Source - Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News