அரசியல் நாகரீகத்தை மீறி முதலமைச்சரை அநாகரிகமாக பேசும் உதயநிதி.. நெட்டிசன்கள் கடும் கண்டனம்.!
அரசியல் நாகரீகத்தை மீறி முதலமைச்சரை அநாகரிகமாக பேசும் உதயநிதி.. நெட்டிசன்கள் கடும் கண்டனம்.!

தமிழக அரசியலில் கடந்த காலங்களில் அனைவரும் நாகரீகமான முறையில் பேசி வந்தனர். ஆனால் தற்போதைய அரசியல் சூழலில் உதயநிதி மிகவும் அநாகரிகமாக பேசி வருகின்றதை காண முடிகிறது.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் மிகவும் அநாகரிகமான வார்த்தையில் பேசியுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இதற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர். உங்க தாத்தாவிற்கே நாகரீகம் என்றால் என்னவென்று தெரியாது. அவர் வழியில் பிறந்த உனக்கு எங்கே நாகரீகம் இருக்கும் சொல்லுங்கள் என பதிவிட்டுள்ளனர்.
அரசியலில் மிகவும் நாகரீகமான முறையில் பேசினால்தான் மக்களிடம் செல்வாக்கு பெறமுடியும். இப்படி தரம்தாழ்ந்து பேசினால் அரசியலில் சரிந்து போவார்கள் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.