Kathir News
Begin typing your search above and press return to search.

திருவல்லிக்கேணியில் போட்டியிடும் உதயநிதி.. உள்ளடி வேலை செய்ய தயாரான லோக்கல் நிர்வாகி.!

திருவல்லிக்கேணியில் போட்டியிடும் உதயநிதி.. உள்ளடி வேலை செய்ய தயாரான லோக்கல் நிர்வாகி.!

திருவல்லிக்கேணியில் போட்டியிடும் உதயநிதி.. உள்ளடி வேலை செய்ய தயாரான லோக்கல் நிர்வாகி.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  26 Dec 2020 8:32 AM GMT

வருகின்ற சட்டசபை தேர்தலில், திருவல்லிக்கேணி -சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுவதற்கு தி.மு.க., இளைஞரணி செயளாலர் உதயநிதி தரப்பு முடிவு செய்துள்ளது. அத்தொகுதியில் போட்யிட மாவட்ட நிர்வாகிகளும், பகுதி நிர்வாகிகளும் விரும்புவதால், சொந்த கட்சியிலேயே உதயநிதிக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

சென்னை மாநகரில் உள்ள, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் இருந்து, ஜெ.அன்பழகன் 2 முறை எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்றுள்ளார். அவரது மறைவுக்கு பின்னர், அத்தொகுதி காலியாக உள்ளது.

வருகின்ற சட்டசபை தேர்தலில் அத்தொகுதியில், உதயநிதி போட்டியிட வேண்டும் என, இளைஞரணியி விரும்புவதாக தெரிகிறது.பூத் கமிட்டி உறுப்பினர்கள் நியமிப்பது, வாக்காளர்கள் பட்டியலில், இறந்தவர்களின் பெயர் பட்டியல் நீக்குவது, புதிய வாக்காளர்கள் சேர்ப்பது போன்ற பணிகளை உதயநிதி தரப்பு முடுக்கி விட்டுள்ளது. மதன் தலைமையில், சேப்பாக்கம் பகுதி நிர்வாகிகள், உதயநிதியை வெற்றி பெற வைக்க வேண்டும் என களப் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

ஆனால், மாவட்ட நிர்வாகி ஒருவர், மறைந்த முன்னாள் அமைச்சர் வாரிசை போட்டியிட வைப்பதற்கான ஏற்பாடுகளை ஒருபக்கம் திரைமறைவில் செய்து வருகிறார். அதேபோன்று திருவல்லிக்கேணியை சேர்ந்த பகுதி நிர்வாகி ஒருவர், இந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என ஒற்றைக்காலில் நிற்கிறார்.

உதயநிதி போட்டியிடுகிறார் என, அத்தொகுதியில் உள்ள கட்சி நிர்வாகிகளுக்கு தெரிய வந்த பின்னரும் மாவட்ட நிர்வாகி, தன் ஆதரவாளரை நிறுத்த முயற்சிப்பதும், பகுதி நிர்வாகி, தாம் போட்டியிட விரும்புவதும், கட்சிக்கு செய்கிற துரோகம் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

தங்களுக்கு தொகுதி கிடைக்காத ஏமாற்றத்தினால், போட்டியிட விரும்பும் கட்சி நிர்வாகிகள் உதயநிதிக்கு எதிராக, திரைமறைவில் உள்ளடி வேலையில் ஈடுபட வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. தலைவரின் மகன் என்றால் உடனடியாக தொகுதியில் நிற்பதற்கு வாய்ப்பு கிடைக்கிறது, அதே திமுகவில் காலம் காலமாக எவ்வளவு பேர் உழைத்துள்ளனர் அவர்களுக்கு கொடுக்காத வாய்ப்பு உதயநிதிக்கு மட்டும் ஏன் என கேள்வி எழுந்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News