என்ன முடிஞ்சா கைது பண்ணுங்க.. எடப்பாடிக்கு சவால் விட்ட உதயநிதி.!
என்ன முடிஞ்சா கைது பண்ணுங்க.. எடப்பாடிக்கு சவால் விட்ட உதயநிதி.!
By : Kathir Webdesk
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பெண்கள் மற்றும் முதலமைச்சரை அவதூறாக பேசியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு உதயநிதி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சவால் விட்டுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற திமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக உதயநிதி கலந்து கொண்டார். அப்போது அவர் வழக்கு குறித்து பேசினார.
தன்மீது எந்த வழக்கு வேண்டுமென்றாலும் போட்டுக்கொள்ளுங்கள். முடிந்தால் தன்னை கைது பண்ணுங்க எனவும் முதலமைச்சருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். தற்போது அவர் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. விரைவில் உதயநிதியை கைது செய்யவும் வாய்ப்புள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தகவல் கூறுகின்றன.
ஏற்கெனவே தமிழகம் முழுவதும் உதயநிதியை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. தற்போது அவரின் பேச்சு மீண்டும் அதிமுகவினரிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.