மிச்சம் இருக்கும் எம்.எல்.ஏ, எம்.பி'க்களை போராடும் உத்தவ் தாக்கரே!
By : Thangavelu
அரசுக்கு அளித்து வந்த ஆதரவு வாபஸ்பெறப்பட்ட நிலையில், சிவசேனா தலைவர் உத்தவா தாக்கரே மக்களவையில் உள்ள தன்னுடைய கட்சியின் கொறடாவை மாற்றியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி ஆட்சி நடத்தி வந்தது. முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பதவியேற்றிருந்தார். அவருக்கு போதுமான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இல்லாத காரணத்தினால் பதவியை இழந்தார். இதற்கு இடையில் அவரது கட்சியில் மூத்த அமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டே புதிய அரசை அமைத்துள்ளார். இதனால் சிவசேனா கட்சியில் உள்ள பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் ஷிண்டேவை ஆதரிக்க தொடங்கியுள்ளனர். இதனால் அக்கட்சியின் கூடாரமே காலியாக வாய்ப்பு இருக்கிறது.
இந்நிலையில், நாடாளுமன்றம் மக்களவையில், சிவசேனாவுக்கு 19 பேரும், மாநிலங்களவையில் மூன்று பேரும் உள்ளனர். அவர்கள் ஷிண்டே அணிக்கு செல்லாமல் இருப்பதற்காக உத்தவ் தாக்கரே கடுமையான போராட்டங்களை முன்னெடுத்துள்ளார். இதற்காக உத்தவ் தாக்கரே மக்களவை சிவசேனா கொறடாவை மாற்றியுள்ளார். அதன்படி தற்போது இருக்கும் பாவ்னா காவ்லியை மாற்றம் செய்துவிட்டு, ராஜன் விச்சாரே என்பவரை நியமனம் செய்துள்ளார். இதற்கான மனு சபாநாயகரிடம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என சிவசேனா எம்.பி. ராகுல் செவாலே கட்சி தலைமையிடம் கோரிக்கை ஒன்றை வைத்திருந்தார். தற்போது மக்களவையில் உள்ள 12 பேர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவாக இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே எம்.எல்.ஏ.க்கள் 40 பேர் உள்ளனர். தற்போது எம்.பி.யும் ஷிண்டே பக்கம் சென்றால் கட்சியும் அவருடன் செல்ல வாய்ப்பு உள்ளது. இதனால் உத்தவ் தாக்கரே தினமும் பதற்றத்திலேயே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Vikatan