உதயநிதி வருகைக்காக காக்க வைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் !
மாற்றுத்திறனாளிகளை உதயநிதி வருகைக்காக காக்க வைத்தது சரியல்ல என பலர் கருதுகின்றனர்.
By : Mohan Raj
மாற்று திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சிக்கு மாற்றுத்திறனாளிகளை காக்க வைத்து தாமதமாக வந்துள்ளார் எம்.எல்.ஏ உதயநிதி.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் சட்டமன்ற அலுவலகத்தில் 30 மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நலத்திட்ட உதவி நிகழ்ச்சி காலை 10 மணி அளவில் நடைபெற இருந்த நிலையில் பல நிகழ்ச்சிகளுக்கு உதயநிதி சென்று வந்ததால் 10 மணிக்கு வரவேண்டியவர் காலதாமாக வந்தார்.
மாற்றுத்திறனாளிகள் உதயநிதி கையால் நலத்திட்ட உதவிகள் வாங்குவதற்காக காக்க வைக்கப்பட்டனர், நல்ல நிலையில் உள்ள கட்சி தொண்டர்கள் காத்திருப்பதில் தவறில்லை, ஆனால் உடல் ரீதியாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளை அரசியல் நிகழ்விற்காக காக்க வைத்து நிகழ்ச்சி நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் வரும் நேரம் சரியாக தெரிந்து அந்ந சமயத்தில் அவர்களை காக்க வைக்காமல் வரவழைத்திருக்கலாம் அல்லது மற்ற நிகழ்ச்சிகளை தள்ளிவைத்துவிட்டு மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியை முன் வைத்திருக்கலாம். ஆனால் மாற்றுத்திறனாளிகளை உதயநிதி வருகைக்காக காக்க வைத்தது சரியல்ல என பலர் கருதுகின்றனர்.