Kathir News
Begin typing your search above and press return to search.

நாளை தமிழகம் வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.!

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக இணைந்துள்ளது. அவர்களுக்கான தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.

நாளை தமிழகம் வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.!
X

ThangaveluBy : Thangavelu

  |  6 March 2021 8:40 AM IST

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக இணைந்துள்ளது. அவர்களுக்கான தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை கேரளா மாநிலம், திருவனந்தபுரம் வழியாக நாகர்கோவில் வருகை புரிகிறார். இதன்பின்னர் சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலைய சுவாமி கோயிலில் தரிசனம் செய்ய உள்ளார்.




இதனையடுத்து காலை 11.15 மணியளவில் வெற்றிக்கொடியேந்தி வெல்வோம் என்ற பெயரில் பிரச்சாரம் செய்கிறார். இதன் பின்னர் பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார். மீண்டும் கேரளா மாநிலத்திற்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.




ஏற்கெனவே மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழகத்தில் பலமுறை வருகை புரிந்து அரசு திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார். அது மட்டுமின்றி பாஜக மாநாடு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு பாஜகவிற்கு வாக்கு சேகரித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் தமிழகத்திற்கு மத்திய அமைச்சர் வருகையால் திமுக கூட்டணி விழிபிதுங்கியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News