உபி'யில் இரண்டாவது முறையாக முதலமைச்சர்: வரலாற்றை மாற்றிய யோகி ஆதித்யநாத்!
உத்தரப்பிரதேசத்தில நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக அதிகமான இடங்களை பிடித்துள்ளது. இதனால் மீண்டும் பாஜக ஆட்சியே தொடருகிறது. இதனால் இரண்டு வரலாற்று சாதனைகளை பாஜக பதிவு செய்கிறது.
By : Thangavelu
உத்தரப்பிரதேசத்தில நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக அதிகமான இடங்களை பிடித்துள்ளது. இதனால் மீண்டும் பாஜக ஆட்சியே தொடருகிறது. இதனால் இரண்டு வரலாற்று சாதனைகளை பாஜக பதிவு செய்கிறது.
5 மாநில சட்டமன்ற தேர்தலில் பெரிய மாநிலமாக இருப்பது உபி மட்டுமே. அங்கு மொத்தம் 403 இடங்கள் உள்ளது. அதில் பெரும்பான்மைக்கு தேவையான 202க்கும் அதிகமான இடத்தை பாஜக பிடித்துள்ளது. இதனால் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது.
இந்நிலையில், 1985ம் ஆண்டுக்கு பின்னர் உபியில் ஆண்ட கட்சியே மீண்டும் ஆட்சியை கைப்பற்றுகிறது. இதனால் வரலாற்று வெற்றியை பாஜக நிகழ்த்தியுள்ளது. கடந்த 1980 மற்றும் 1985ம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி இரண்டு முறை வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது. அதன் பின்னர் எந்த கட்சியும் மீண்டும் ஆட்சிக்கு வந்ததில்லை. ஆனால் பாஜக முதன் முறையாக இரண்டாவது முறையும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. இதனால் உபி வரலாற்றில் இது ஒரு மைல் கல் எனவும் கூறப்படுகிறது.