நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்: ஒவ்வொரு கட்சிகளும் பிடித்த வார்டுகள் விவரம்!
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்ரவரி 19ம் தேதி நடைபெற்ற நிலையில், இன்று (பிப்ரவரி 22) வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகி வருகிறது. அதன்படி திமுக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளை அதிகார துஷ்பிரயோகத்தால் வெற்றிகளை குவித்துள்ளது.
By : Thangavelu

அதன்படி மதியம் 3 மணி வரையில் 1374 மாநகராட்சி வார்டுகளில் 584க்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் திமுக 411 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 73 வார்டுகளிலும், காங்கிரஸ் 40 இடங்களிலும் வெற்றியடைந்துள்ளது. பாஜக 5 இடங்களில் வெற்றியடைந்துள்ளது.
மேலும், 3,843 நகராட்சி வார்டுகளில் ஒரு வார்டில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. 8 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதம் வெளியான தேர்வு முடிவுகளின்படி திமுக 1796 வார்டுகளில் வெற்றியடைந்துள்ளது. அதிமுக 487 வார்டுகளையும், காங்கிரஸ் 125 இடங்களையும் பிடித்துள்ளது. பாஜக 46 இடங்களை பிடித்துள்ளது. அதே போன்று பேரூராட்சிகளில், 196 வார்டுகளில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 4257 வார்டுகளில் திமுகவும், 1176 வார்டுகளில் அதிமுகவும், 327 வார்டுகளில் காங்கிரஸ், 192 வார்டுகளில் பாஜகவும் கைப்பற்றியுள்ளது. மேலும், இதன் முடிவுகள் மாறுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.
Source, Image Courtesy: Maalaimalar