உதயநிதி தொகுதியில் மட்டும் தட்டுப்பாடின்றி தடுப்பூசி.. மற்ற தொகுதி மக்கள் கடும் அதிருப்தி.!
சென்னையில் உள்ள அனைத்து தொகுதிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது. இருந்த போதும் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்ற தொகுதியில் மட்டும் தினமும் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. மற்ற தொகுதிகளில் தடை ஏற்பட்டாலும் அவர் தொகுதியில் மட்டும் நிற்பதில்லை.
By : Thangavelu
முதலமைச்சரின் மகனான உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்ற சென்னையில் உள்ள சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் மட்டும் தங்குத்தடையின்றி கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இது அத்தொகுதி மக்களுக்கும் மட்டும் மகிழ்ச்சியை அளித்தாலும், அருகாமையில் உள்ள மற்ற தொகுதி மக்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள அனைத்து தொகுதிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது. இருந்த போதும் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்ற தொகுதியில் மட்டும் தினமும் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. மற்ற தொகுதிகளில் தடை ஏற்பட்டாலும் அவர் தொகுதியில் மட்டும் நிற்பதில்லை.
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி இதுவரை 1.52 கோடிக்கு மேல் போடப்பட்டுள்ளது. இன்னும் 9 கோடிக்கு தடுப்பூசி போட வேண்டியுள்ளது. மத்திய அரசு அனைவருக்கும் இலவச தடுப்பூசி அளிக்கப்படும் என உறுதி அளித்திருப்பதால், அனைத்து மக்களும் ஆர்வமுடன் தடுப்பூசி போடுவதற்கு மருத்துவனை மற்றும் முகாம்களுக்கு வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில மாதத்தில் குறைந்தது 5 நாட்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு வருகிறது. அப்படி இருந்தபோதிலும் முதலமைச்சர் ஸ்டாலின மகன் உதயநிதியின் தொகுதியான சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதியில் மட்டும் சிறப்பு சலுகையில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்த சேவை அத்தொகுதி மக்களை திருப்தி படுத்தியிருந்தாலும், சென்னையில் உள்ள மற்ற தொகுதி மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் முதலமைச்சர் வெற்றி பெற்ற கொளத்தூர் தொகுதியில் தட்டுப்பாடு ஏற்படுகிறது. எனவே அனைத்து தொகுதிகளிலும் ஒரே மாதிரியான தடுப்பூசிகள் போட வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.