Begin typing your search above and press return to search.
எம்.எல்.ஏ., அலுவலகம் திறப்பு விழா: பா.ஜ.க., அ.தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்பு.!
கோவை, தெற்கு சட்டமன்ற தொகுதியின் புதிய சட்டமன்ற உறுப்பினராக பாஜக தேசிய மகளிர் அணித்தலைவர் வானதி சீனிவாசன் கடந்த மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை தொடர்ந்து இன்று தெற்கு தொகுதி சட்டமன்ற அலுவலகத்தில் இன்று பூஜை நடைபெற்றது.
By : Thangavelu

இந்த திறப்பு விழாவில் அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்து முன்னணி மற்றும் பாஜக நிர்வாகிகள் வானதி சீனிவாசனுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
சட்டமன்ற அலுவலக திறப்பு விழா குறித்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வானதி சீனிவாசன் பதிவிட்டுள்ளார்.
Next Story