Kathir News
Begin typing your search above and press return to search.

'முடிந்தால் பாருங்கள்' என ஓரங்கட்டிய வானதி சீனிவாசன் - வழக்கம் போல் சவால் விட்டு வாங்கி கட்டிக்கொண்ட தி,மு.க எம்.பி

'முடிந்தால் தூக்குங்கள் பார்க்கிறோம்' என தி.மு.க தர்மபுரி எம்.பி செந்தில் குமாருக்கு வானதி சீனிவாசன் பதிலடி கொடுத்துள்ளார்.

முடிந்தால் பாருங்கள் என ஓரங்கட்டிய வானதி சீனிவாசன் - வழக்கம் போல் சவால் விட்டு வாங்கி கட்டிக்கொண்ட தி,மு.க எம்.பி
X

Mohan RajBy : Mohan Raj

  |  9 May 2022 5:30 PM IST

'முடிந்தால் தூக்குங்கள் பார்க்கிறோம்' என தி.மு.க தர்மபுரி எம்.பி செந்தில் குமாருக்கு வானதி சீனிவாசன் பதிலடி கொடுத்துள்ளார்.

நேற்றைய தினம் தி.மு.க எம்.பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா பா.ஜ.க'வில் அண்ணாமலை முன்னிலையில் தன்னை இணைத்துக் கொண்டார், தி.மு.க'வின் மூத்த தலைவர் மகனே அங்கிருந்து விலகி பா.ஜ.க'வில் தன்னை இணைத்துக்கொண்டது தமிழகத்து அரசியல் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பா.ஜ.க'வில் இணைந்த சூர்யா, 'தி.மு.க'வில் குடும்ப அரசியல் நடக்கிறது எனவும் அங்கு உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை' எனவும் கூறியதும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அதிர்ந்த தி.மு.க'வினர் பேசாமல் அமைதியாக இருந்து வந்தனர்.

இந்த சூழலில் வழக்கம்போல் தன் பாணியில் எதற்கெடுத்தாலும் கருத்துக் கூறும் தி.மு.க தர்மபுரி எம்.பி செந்தில்குமார் இன்று காலை தனது ட்விட்டர் பதிவில் ஒரு கருத்தை வெளியிட்டு இருந்தார். அதன்படி, 'தி.மு.க'வில் எந்த பதவியிலும் இல்லாத ஒருவர் உங்கள் கட்சியில் இணைவதை கொண்டாடும் தமிழக பா.ஜ.க உங்களுக்கு ஒரு தகவல் உங்கள் கட்சியின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் உள்ளார்கள் எங்கள் தலைமை இசைவு தெரிவித்தால் இரண்டு பேரையும் தூக்கி விடுவோம்' என பதிவிட்டார்.

ஆர்வத்தில் அவர் பதிவிட்ட சில நிமிடங்களில் பா.ஜ.க'வின் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அவர்கள் 'முடிந்தால் தூக்குங்கள் பார்க்கிறோம்' என சவால் விடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வழக்கம்போல் தன் இஷ்டத்திற்கு ஏதாவது கருத்து கூறி விட்டு பின் தலைமை கூப்பிட்டு கடிந்து கொள்ளும் அளவிற்கு இருக்கும் தி.மு.க எம்.பி செந்தில்குமார் தற்போது இந்த விவகாரத்தில் தேவையின்றி வாயை கொடுத்து விட்டோமோ என எண்ணும் அளவிற்கு இருந்தது வானதி சீனிவாசன் பதிலடி கொடுத்துள்ளார்.


Source - Twitter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News