Kathir News
Begin typing your search above and press return to search.

மாரிதாஸை கைது செய்தவர்கள், பிபின் ராவத் மரணத்தை கொண்டாடியவர்களை ஏன் கைது செய்யவில்லை? - தி.மு.க. அரசுக்கு வானதி சீனிவாசன் கேள்வி!

நாட்டுக்கு இந்த பெரும் சோகத்தை கொண்டாடும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பல்வேறு மாநில முதல்வர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

மாரிதாஸை கைது செய்தவர்கள், பிபின் ராவத் மரணத்தை கொண்டாடியவர்களை ஏன் கைது செய்யவில்லை? -  தி.மு.க. அரசுக்கு வானதி சீனிவாசன் கேள்வி!

ThangaveluBy : Thangavelu

  |  11 Dec 2021 5:29 AM GMT

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில், இந்தியாவின் முதல் முப்படை தலைமைத் தளபதி திரு.பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் ராணுவ அதிகாரிகள் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்திருப்பது நாடு முழுவதும் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நாட்டுக்கு இந்த பெரும் சோகத்தை கொண்டாடும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பல்வேறு மாநில முதல்வர்கள் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.


ஆனால், தமிழகம் காஷ்மீர் போல பிரிவினைவாதிகளின் கைகளில் சிக்கிவிடக் கூடாது என்ற ஆதங்கத்தில் ட்விட்டரில் பதிவிட்ட அரசியல் விமர்சகர் திரு.மாரிதாஸ் அவர்களை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். இது கடும் கண்டனத்துக்குரியது. மாரிதாஸை அவரச அவசரமாக கைது செய்த காவல்துறையினர், முப்படை தலைமை தளபதி மரணத்தை கொண்டாடியவர்களையும், நமது ராணுவத்தை அவமதிக்கும் வகையில் பதிவிட்டவர்களையும் கைது செய்யவில்லை. அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போது மட்டுமல்ல, பிரிவினை வாதம் பேசுபவர்கள் மீது எப்போதுமே திமுக அரசு நடவடிக்கை எடுப்பதில்லை. இது, பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக திமுக அரசு செயல்படுகிறது என்ற மாரிதாஸின் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.


திமுகவின் கொள்கைகளையும், திமுக அரசின் செயல்பாடுகளையும் மிகக் கடுமையாக விமர்சித்து வருபவர் மாரிதாஸ். இந்தப் பின்னணியில்தான் அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். கருத்துச் சுதந்திரம் பற்றி அதிகமாக பேசும் கட்சி திமுக. ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு தங்களை ஆதரிப்பவர்களுக்கு மட்டுமே கருத்துச் சுதந்திரம் உண்டு என்ற வகையில் அவர்களின் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன. தங்களை எதிர்க்கும் குரலை ஒடுக்கும் ஜனநாயகத்திற்கு, கருத்துரிமைக்கு எதிரான நடவடிக்கைகளை திமுக அரசு கைவிட வேண்டும். மாரிதாஸ் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இவ்வாறு வானதி சீனிவாசன் வெளியிட்டுள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Twiter


Next Story
கதிர் தொகுப்பு
Trending News