பெண்களை வைத்து ரூ.5 கோடி மதிப்புள்ள பங்களா அபகரிப்பு ! வி.சி.க. பிரமுகர் அதிரடி கைது!
லண்டனில் வசித்து வந்த பெண்ணின் பங்களாவை அபகரித்து வந்ததாக விசிக பிரமுகர் அப்புன் என்பவரை வில்லிவாக்கம் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

By : Thangavelu
லண்டனில் வசித்து வந்த பெண்ணின் பங்களாவை அபகரித்து வந்ததாக விசிக பிரமுகர் அப்புன் என்பவரை வில்லிவாக்கம் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
லண்டனில் வசித்து வந்த வெளிநாட்டு வாழ் தம்பதிகளான பசுபதி, மங்களேஸ்வரி. இவர்கள் சென்னையை பூர்விடமாக கொண்டதனால், வில்லிவாக்கம் என்.ஆர்.கார்டன் பகுதியில் 1982ம் ஆண்டு பங்களா வீடு ஒன்றை கட்டியுள்ளனர். இந்த வீடு மங்களேஸ்வரி பெயரில் உள்ளது.
அதன் பின்னர் கடந்த 2013ம் ஆண்டு தனது மகள் மற்றும் பேரக்குழந்தைகள் பெயரில் வீட்டை பதிவு செய்துள்ளார் மங்களேஸ்வரி சில மாதங்களில் இறந்துள்ளார்.
இதனால் மங்களேஸ்வரியின் கணவர் பசுபதி மட்டும் தனியாக சென்னையில் உள்ள வீட்டில் வசித்து வந்துள்ளார். பசுபதியின் மகள் சித்ராதேவி வெளிநாட்டில் வசிப்பதால் தன்னுடைய தந்தையை கவனிக்க முடியாமல் அவதியுற்று வந்துள்ளார்.
இதனால் தனது தந்தையை பார்த்துக்கொள்வதற்கு வீட்டில் தங்கி பார்த்துக்கொள்வதற்காக செய்திதாளில் விளம்பரம் கொடுத்துள்ளார். அப்போது அதனை பார்த்து கொளத்தூர் பகுதியை சேர்ந்த அம்பிகா 50, என்ற பெண் மாதம் 20 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் பணியில் சேர்ந்துள்ளார்.
இந்நிலையில், பசுபதிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் வீட்டில் இருந்தே கவனித்துக்கொள்வதற்கு தன்னிடம் செவிலியர் இருப்பதால் பணிப்பெண் அம்பிகா சித்ரா தேவியிடம் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து அரக்கோணம் பகுதியை சேர்ந்த செவிலியர் சிநேகா என்ற பெண்ணை பணியில் சேர்த்துள்ளார். அப்போது சில மாதங்களில் பசுபதியிடம் செவிலியர் தவறான முறையில் நடந்து கொண்டுள்ளார். இதனால் பணிப்பெண் இது பற்றி அறிந்து சித்ராதேவியிடம் கூறியுள்ளார். இதனால் சிநேகாவை வேலையில் இருந்து நிறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த விசிக பிரமுகர் அப்புன் என்ற தயாளமூர்த்தி தனக்கு தெரிந்த சுமதி என்ற 40 வயது மதிக்கதக்க பெண்ணை அந்த வீட்டில் பணிக்கு அமர்த்தியுள்ளார்.
இதனை தொடர்ந்து பசுபதி உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். தனது தந்தைக்கு இறுதி சடங்கு செய்வதற்காக லண்டவில் இருந்து சித்ராதேவி வந்துள்ளார். அப்போது தந்தைக்கு இறுதி சடங்கு செய்ய விடாமல் விசிக பிரமுகர் அப்புன் மற்றும் சுமதி, சிநேகா உள்ளிட்டோர் தடுத்துள்ளனர்.
இது குறித்து போலீசாரிடம் சென்ற பின்னர் ஒரு வழியாக சித்ராதேவி தனது தந்தை பசுபதிக்கு இறுதி சடங்கு செய்துள்ளார். ஒரு சில வாரங்களில் விசிக பிரமுகர் அப்புன் மற்றும் பணிப்பெண்கள், செவிலியர்கள் சேர்ந்து சித்ராதேவியிடம் மிரட்டத்தொடங்கியுள்ளனர். பங்களாவை உடனடியாக தங்களின் பெயரில் பதிவு செய்ய வேண்டும். இல்லை என்றால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியுள்ளார்.
அப்போது வீட்டில் இருந்த சிநேகா மற்றும் அப்புன் உள்ளிட்டோர் சித்ராதேவியை தொடர்ந்து மிரட்டிவர அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை தொடர்ந்து அப்புன் மற்றும் செவிலியர் உள்ளிட்ட 3 பெண்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Source: Polimer Tv
Image Courtesy: Polimer Tv
