Kathir News
Begin typing your search above and press return to search.

நான் திமுக எம்.பிங்க ! பல்டி அடித்த விசிக ரவிகுமார் !

Breaking News.

நான் திமுக எம்.பிங்க ! பல்டி அடித்த விசிக ரவிகுமார் !
X

TamilVani BBy : TamilVani B

  |  9 Sept 2021 9:45 AM IST

கடந்த 2019 நாடளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த இந்திய ஜனநாயகட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் தங்கள் சின்னத்தில் போட்டியிடாமல் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது. இந்த தேர்தலில் திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றனர்.

இந்த நிலையில், ஒரு கட்சியை சார்ந்த உறுப்பினர் மற்றோரு கட்சியின் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் அந்த வெற்றி செல்லாது என அறிவிக்க கோரி சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகுமார் தான் திமுக கட்சியின் உறுப்பினர் என தெரிவித்தார்.




அதாவது அவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது மனு தாக்கலில் தன்னை திமுக உறுப்பினர் என குறிப்பிட்டுள்ளதால் என் வெற்றி செல்லாது என அறிவிக்க முடியாது என தெரிவித்தார். இதே போலஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேச மூர்த்தி நான் திமுக உறுப்பினர் தான் என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ரவிகுமார் விசிகவின் உறுப்பினராகவே மக்கள் மத்தியில் அறியப்பட்டார். அதே தான் தேர்தல் பிரசாரங்களிலும் எதிரொலித்தது ஆனால் இப்போது பதவிக்காக தனது கட்சியை மாற்றியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source: News 18 Tamil

Next Story
கதிர் தொகுப்பு
Trending News