"யார்ரா நீ, பெரியா ஆளா?" என போதையில் போலீசிடம் ரவுடித்தனம் செய்த வி.சி.க வழக்கறிஞர் - வைரலாகும் வீடியோ !

சீர்காழி காவல் நிலையத்திற்குள் குபோதையில் பகுந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கறிஞர் ஒருவர். காவல் ஆய்வாளர் உள்ளிட்போரை தரக்குறைவாக பேரி ரகளை செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.
சீர்காழியை சேர்ந்தவர் வழக்கறிஞர் ராஜேஷ், விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த இவர், சீர்காழி நீதிமன்ற பார் கவுன்சிலிலும் உள்ளார் இவர் குடிபோதையில் சீர்காழி பழைய பேருந்து நிலையம் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த போது தனியார் பேருந்து மீது தனது காரை மோதி விபத்தை ஏற்படுத்தியதாக தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் புகார் அளித்தனர்.
இந்த புகாரை தொடர்ந்து காவல்துறையினர் போதையி இருந்த ராஜேஷ் அவர்களையும், அவரது காரையும் காவல்நிலையத்திற்கு தூக்கி வந்தனர். அங்கு வந்த போதையில் இருந்த ராஜேஷ் 'நான் யாரு தெரியுமா?' என தகாத வார்த்தைகளால் காவல்துறை அதிகாரிகளையும், புகார் அளித்தவர்களையும் பேசியிருக்கிறார். பேசியது மட்டுமல்லாமல் அத்துமீறி காரையும் காவல்நிலையத்தில் இருந்து எடுத்து சென்றிருக்கிறார்.
இதன் பின்னர் போலீசார் வழக்கு பதிந்து போதையில் இருந்த வழக்கறிஞர் ராஜேஷ் மற்றும் அவரது கூட்டாளி சீர்காழி ஆட்டோ சங்க தலைவர் சிவா ஆகியோரை கைது செய்தனர். இதில் ராஜா என்பவர் தப்பி ஒடிவிட்டார். அவரை தொடர்ந்து தேடி வருகின்றனர்.