Kathir News
Begin typing your search above and press return to search.

அய்யா ராசா! அப்ப கொடுத்த அளவாவது கொடுங்கய்யா! தி.மு.க.விடம் சுருண்டு படுத்த விடுதலை சிறுத்தை!

அய்யா ராசா! அப்ப கொடுத்த அளவாவது  கொடுங்கய்யா! தி.மு.க.விடம் சுருண்டு படுத்த விடுதலை சிறுத்தை!
X

MuruganandhamBy : Muruganandham

  |  2 March 2021 6:30 AM IST

தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தை 10 தொகுதிகளை கேட்பதாக தகவல் கசிகிறது. அதற்காக 25 விருப்ப தொகுதிகளையும் பட்டியல் போட்டு கொடுத்துள்ளது.

அந்த லிஸ்ட்டில் செய்யூர், கரூர், திண்டிவனம், வானூர், காட்டுமன்னார் கோவில், திட்டக்குடி, ஒட்டப்பிடாரம் உள்ளிட்ட தொகுதிகள் இடம்பெற்றுள்ளதாக அக்கட்சி வட்டாரத்தினர் கூறுகின்றனர்.

கடந்த சட்ட சபை தேர்தலின் போது, மக்கள் நலக்கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி 25 தொகுதிகளில் போட்டியிட்டது.

அதற்கு முன்னதாக 2011 சட்ட சபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இணைந்து, தமிழத்தில் 10 தொகுதிகளிலும், புதுச்சேரியில் 2 தொகுதியிலும் போட்டியிட்டது.

இந்த முறை, அந்த அளவுவாவது இடங்களை ஒதுக்க வேண்டும் என தி.மு.க.விடம் விடுதலை சிறுத்தை கட்சி வலியுறுத்தி வருகிறது. இன்னொரு கோரிக்கையாக தங்கள் கட்சி தனி சின்னத்தில் மட்டுமே நிற்க போவதாக பிடிவாதம் செய்கிறது.

இதுகுறித்து விடுதலை சிறுத்தை தரப்பில் விசாரித்து பார்க்கையில், 10 தொகுதிகளை கட்டாயம் ஒதுக்க வேண்டும் என்று கூறி வருகிறோம்.

ஆனால் உறுதியாக 8 தொகுதிகள் ஒதுக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. எந்தெந்த தொகுதிகள் என்பதை தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேசிய பிறகு தான் தெரியும். தனி சின்னத்தில் போட்டியிடவே விருப்பம் தெரிவித்து உள்ளோம்" என்று தெரிவித்துள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News