Kathir News
Begin typing your search above and press return to search.

விஜயகாந்த் உடல்நிலை சீராக இருக்கிறது.. தே.மு.தி.க. அறிக்கை.!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது என்று தனியார் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளதாக அக்கட்சி சார்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

விஜயகாந்த் உடல்நிலை சீராக இருக்கிறது.. தே.மு.தி.க. அறிக்கை.!
X

ThangaveluBy : Thangavelu

  |  19 May 2021 4:07 AM GMT

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது என்று தனியார் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளதாக அக்கட்சி சார்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று அதிகாலை மூச்சுத்திணறல் காரணமாக சென்னை, மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற செய்திகள் ஊடகங்களில் பரவியது.




இந்நிலையில், வழக்கமாக மேற்கொள்ளும் மருத்துவ பரிசோதனைக்காகவே விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேமுதிக தெரிவித்துள்ளது.

மேலும், விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது என்று தனியார் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளதாகவும் தேமுதிக தெரிவித்துள்ளது. விரைவில் வீடு திரும்புவார் என்றும் வதந்திகளை நம்ப வேண்டாம் என அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News