விழுப்புரம் மாவட்டத்தில் குலுக்கல் முறையில் வாக்குப்பதிவு இயந்திரம் பணி தொடக்கம்.!
vilupuram dist election machine

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரம் சரிபார்த்தல், வாக்குச்சாவடிகளை கணக்கெடுக்கும் பணிகள் உள்ளிட்டவை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதன் தொடர்ச்சியாக வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பட வேண்டிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணிகளை இன்று மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது.
இந்த பணியானது இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் முன்னிலையில், முதற்கட்ட பரிசோதனை குலுக்கல் முறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா மற்றும் கோட்டாட்சியர் ஹரிதாஸ் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.